கம்பராமாயணம் 3591 · ஆரணிய 8.189

Section ஆரணிய காண்டம் / 8. சடாயு உயிர் நீத்த படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1''
''

பொருள் · Meaning in Tamil

புண்ணியரே - நல்வினை உடையவர்களே; பயன் இல் - பயன் இல்லாத; பழி என் யாக்கை - பழிப்பதற்குரிய என் உடம்பை; இன்று போக்குகின்றேன் - இப்பொழுது விட்டு விடப் போகிறேன், பாக்கியத்தால் - (நான் செய்த) புண்ணியத்தால்; கண்ணுற்றேன் - உங்களைக் காணப் பெற்றேன்; வம்மின் என்று - வாருங்கள் என்று (அருகில் அழைத்து), அரக்கன் மகுடத்தலை தாக்கித் தகர்த்த - அரக்கன் ஆகிய இராவணனது மகுடத்தோடு கூடிய தலையைத் தாக்கித் தகர்த்திட்ட; மூக்கினால் - (தன் வலிய) அலகினால், உச்சி - (அவர்களுடைய) தலை உச்சியை; முறை முறையே மோக்கின்றான் - மாறி மாறிப் பல முறை மோந்திடுபவன் ஆனான்.

பயன் இல் பழியாக்கை - சீதையை மீட்கப் பயன்படாத உடம்பு. அரக்கன் மகுடத்தலை தகர்த்த - இராவணனுடன் போரிட்டு அவனது கிரீடங்களைக் கீழே தள்ளியதைக் குறித்தது; அதே மூக்கு இராமலக்குவரின் உச்சியை மோந்ததென்க. உச்சி முகர்தல் - பாசமும் அன்பும் உடையார் செயல்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. By good fortune, today, as I am leaving this useless, shameful body,
  2. I have set eyes on you; holy ones, come here!, he said,
  3. and with the beak that had struck and shattered the crowned heads of the demon,
  4. he smelt the crowns of their heads, each in turn.

What the poem says

Caṭāyu counts himself lucky: just as he is about to give up his body, useless because it could not save Cītai, he has been granted the sight of the two brothers. He calls them close, and with the same beak that smashed Irāvaṇaṉ's crowned heads he tenderly smells the tops of their heads, first one and then the other, again and again. Smelling the crown of the head is a traditional gesture of a parent's love.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'' pākkiyattāl, iṉṟu, eṉ payaṉ il paḻi yākkai
pōkkukiṉṟēṉ, kaṇṇuṟṟēṉ; puṇṇiyarē! vammiṉ '' eṉṟu,
tākki arakkaṉ makuṭat talai takartta
mūkkiṉāl ucci muṟaimuṟaiyē mōkkiṉṟāṉ.