கம்பராமாயணம் 3592 · ஆரணிய 8.190

Section ஆரணிய காண்டம் / 8. சடாயு உயிர் நீத்த படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1''
''
பாட வேறுபாடு · Project Madurai reads
1'' வஞ்சனையால் வந்த வரவு என்பது என்னுடைய
நெஞ்சகமே முன்னம் நினைவித்தது ; ஆனாலும் ,
அம் சொல் மயிலை , அருந்ததியை , நீங்கினிர் ஓ ,
எஞ்சல் இலா ஆற்றல் இருவீர் உம் ? '' என்று உரைத்தான் .

பொருள் · Meaning in Tamil

வந்த வரவு - (இராவணன் சீதையை எடுத்து) வந்த வரவு; வஞ்சனையால் என்பது - சூழ்ச்சியால் தானிருக்கும் என்பதை; என்னுடைய நெஞ்சகமே - என்னுடைய மனந்தான்; முன்னே நினைவித்தது - முன்பே நினைக்குமாறு செய்தது; ஆனாலும் - ஆயினும்; எஞ்சல் இலா ஆற்றல் இருவீரும் - குறைவு இல்லாத வலிமை உடைய (நீங்கள்) இருவரும்; அம்சொல்மயிலை - அழகிய பேச்சினிமை உடைய மயில் போன்ற சாயல் கொண்டவளும்; அருந்ததியை - அருந்ததி போன்ற கற்பு நிலை உள்ளவளும் ஆகிய சீதையை; நீங்கினிரோ - (பர்ண சாலையில் தனியாக விட்டுவிட்டுப்) பிரிந்து போய் விட்டீர்களோ?; என்று உரைத்தான் - என்று (சடாயு) கூறினான்.

'இராவணன் சீதையைத் தூக்கி வந்தது சூழ்ச்சியால்தான் இருக்க வேண்டும் என்று என் மனம் கருதியது. எனினும், நீவிர் இருவரும் கற்பின் கொழுந்தைத் தனியே விட்டு விட்டுப் போய் விட்டீர்களோ?' என்று சடாயு கேட்டான். நீங்கினிரோ - தந்தை என்ற உறவு முறை கருதிக் கூறிய கடுஞ் சொல் என்க. நீங்கள் சீதையைத் தனியாக விட்டு விட்டுச் சென்றது தெரிந்திருந்தால் நான் சற்று விழிப்பாக இருந்து இருப்பேன் என்பது குறிப்பு. இதனை

வாரப் பொற் கொங்கை மருகியை மக்களை ஏற்பச் சிந்தனையிட்டு,-அவ் அரக்கர்தம் சர்ப்பைச் சிக்கறத் தேறினன்-சேக்கையில் பார்ப்பைப் பார்க்கும் பறவையின் பார்க்கின்றான் (2731)

என்ற சடாயு காண்படலப் பாடல் உறுதி செய்வதை எண்ணுக. நினைவித்தது - நினைத்தது. பிறவினை தன் வினைப் பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. மயில், அருந்ததி - உவமை ஆகுபெயர்கள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. That his coming was by some trick, my own heart
  2. told me from the start; and yet,
  3. did you leave the sweet-voiced peacock, that Aruntati,
  4. you two whose strength never fails?, he said.

What the poem says

Caṭāyu says his own heart told him from the first that Irāvaṇaṉ had got at Cītai by some trick. Yet he cannot help reproaching them: did the two of them, so mighty, really leave her alone, she who is sweet-voiced as a peacock and as chaste as Aruntati, the star who is the model of the faithful wife?

The reproach is a father's privilege. Had he known she was alone, he would have kept a closer watch, for when he first met the brothers he had promised to watch over them and Cītai as a bird watches over its chicks.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'' vañcaṉaiyāl vanta varavu eṉpatu eṉṉuṭaiya
neñcakamē muṉṉē niṉaivittatu; āṉālum,
am col mayilai, aruntatiyai, nīṅkiṉirō,
eñcal ilā āṟṟal iruvīrum? '' eṉṟu uraittāṉ.