கம்பராமாயணம் 3594 · ஆரணிய 8.192

Section ஆரணிய காண்டம் / 8. சடாயு உயிர் நீத்த படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
''
''
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஆற்றலோன் அவ் உரை அறைய , ஆணையால் ,
ஏற்று , உணர்ந்து , எண்ணி , அவ் எருவை வேந்தனும் ,
'' மாற்ற அரும் துயர் அவர் மனக் கொளா வகை
தேற்றுதல் நன்று '' என , இனைய செப்புவான் .

பொருள் · Meaning in Tamil

ஆற்றலோன் - சொல் ஆற்றல் உடைய இலக்குவன்; ஆணையால் - (இராமனது) கட்டளையினால்; அவ்உரை அறைய - அந்த (வகையான) சொற்களைச் சொல்ல; ஏற்று உணர்ந்து எண்ணி - (அவற்றைக் கேட்டு உணர்ந்து எண்ணிப் பார்த்து; அவ் எருவை வேந்தனும் - அந்தக் கழுகு அரசனாகிய (சடாயுவும்); மாற்ற அருந்துயர் - நீக்க முடியாத துன்பத்தை; இவர்மனக் கொளா வகை - இவர்கள் மனதில் கொள்ளாத படி; தேற்றுதல் நன்று என - தேறுதல் சொல்வது நல்லது என்று எண்ணி; இனைய செப்புவான் - இத்தகைய சொற்களைச் சொல்பவனானான். ஏற்று உணர்ந்து எண்ணி - மற்றவர் கூறுவதைக் கேட்கும் முறை விளக்கமாக வந்தது அறிக. ஆற்றலோன் - வலிமை உடையவன், அறிவு வலிமை உடையன் எனப் பலவாறு கொள்ளலாம். முன் பாடலில் இலக்குவனின் நிரலே சொல்லும் திறம் சுருக்கிக் கூறப்பட்டதால் இங்குச் சொல்லாற்றல் என்று கொள்வதே சாலப் பொருத்தம் என்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. When the able one spoke those words at his brother's bidding,
  2. the king of vultures took them in, understood and weighed them,
  3. and thinking, 'It is good to console them, so that this grief, hard to remove,
  4. does not take hold of their minds,' he spoke these words.

What the poem says

Ilakkuvaṉ, a skilled speaker, has told the story at Irāmaṉ's command. Caṭāyu, the vulture king, listens, understands and reflects, and decides that instead of adding to the brothers' sorrow he should comfort them.

The three verbs, receiving, understanding, weighing, describe the proper way to listen to another's words. The next verses are Caṭāyu's words of consolation.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1āṟṟalōṉ av urai aṟaiya, āṇaiyāl,
ēṟṟu, uṇarntu, eṇṇi, av eruvai vēntaṉum,
'' māṟṟa arun tuyar ivar maṉak koḷāvakai
tēṟṟutal naṉṟu '' eṉa, iṉaiya ceppuvāṉ.