கம்பராமாயணம் 3595 · ஆரணிய 8.193

Section ஆரணிய காண்டம் / 8. சடாயு உயிர் நீத்த படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1''
'
'
''

பொருள் · Meaning in Tamil

ஒருவரால் அதிசயம் அமைக்கல் ஆகுமோ - ஒருவரால் (மட்டும் புதுமையைச் செய்ய முடியுமோ? (முடியாது என்றபடி); துதி அறு பிறவியின் இன்ப துன்பம் தான் - புகழ் அற்ற (மனிதப் பிறவிக்கு வருகிற) இன்ப துன்பங்கள்தான்; விதிவயம் - ஊழ்வினைப்படி வருவன; என்பதை மேற்கொளாவிடின் - என்ற கொள்கையை ஏற்றுக் கொள்ளாமல் போனால்; மதி வலியால் விதி வெல்ல வல்லமோ - அறிவின் வலிமையால் ஊழ்வினையை வெல்லுவதற்கு வல்லமை உடையோமாவோமோ? (ஆக மாட்டோம் என்றவாறு)

நமக்கு வரும் இன்ப துன்பங்கள் விதி வசம் என்ற கோட்பாட்டை ஏற்றுக் கொண்டால் தான் நாம் நம் அறிவு வலிமையால் அதை நீக்க முடியும். விதிவசம் என்பதை ஏற்காவிடின் நம் மதி வலிமையால் இன்ப துன்பங்களை வெல்ல முடியாது என்றபடி. வருவன வந்தே தீரும், அவற்றைத் தடுக்க முடியாது. வந்ததன் பின் விதி வசம் என எண்ணி ஆறுதல் அடைந்து மதி வலியால் அதனைப் போக்கலாம் என்று சடாயு ஆறுதல் கூறுகிறான். 'விதிக்கும் விதியாகும் என் வில் தொழில் காண்டி' (1735) என்று சன்னத்தனாகிக் கொக்கரித்த இலக்குவன், 'வெஞ்சின விதியினை வெல்ல வல்லமோ' (3333) என்று கூறுதல் காண்க. அதிசயம் - புதுமை; துதி அறு பிறவி - புகழ் அற்ற பிறவி. விதி ஊழ், பால், தெய்வம் என்பன ஒரு பொருட் சொற்கள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Can a wonder be brought about by any one person alone?
  2. That the joys and sorrows of this birth that has no glory
  3. lie in the power of fate: unless we accept this,
  4. can we overcome fate by the strength of our understanding?'

What the poem says

Caṭāyu begins his consolation. No single person can make the extraordinary happen at will; the pleasures and pains of human life come by fate. Only one who accepts this can then use wisdom to bear and get past what has come; one who refuses to accept it is simply overwhelmed.

The commentary contrasts this with Ilakkuvaṉ's own words earlier: once he boasted that his bow could be fate to fate itself, but in the moment of Cītai's crisis he too admitted that cruel fate cannot be conquered.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'' aticayam oruvarāl amaikkal ākumō?
' tuti aṟu piṟaviyiṉ iṉpa tuṉpam tāṉ
viti vayam ' eṉpatai mēṟkoḷḷāviṭiṉ,
mati valiyāl viti vella vallamō? ''