கம்பராமாயணம் 3596 · ஆரணிய 8.194
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
தெரிவுறு துன்பம் - (விதி வசத்தால் வருகிறது என்று) தெளியப் பட்ட துன்பம்; வந்து ஊன்ற - ஒருவனிடம் வந்து சேர; சிந்தையை எரிவு செய்து - (அதற்காக அவன் தன்) மனத்தைக் கலங்க விட்டு, ஒழியும் ஈது - அழியும் இத்தன்மை; இழுதை நீரதால் - பேதமைத் தன்மையாகும்; உலகு எலாம் - உலகங்களை எல்லாம்; பிரிவு செய்து - வகுத்துப் பிரித்தலைச் செய்து; பெறுவிப்பான் - படைத்தவனாகிய (பிரமனது); தலை அரிவு செய் - தலையை அறுத்தல் செய்த; விதியினார்க்கு - ஊழ்வினைக்கு, அரிது உண்டாகுமோ - செய்தற்கு அரிய செயல் என்று (ஏதேனும்) உண்டாகுமோ (ஆகாது)
விதியினால் வரும் துன்பத்துக்காக மனம் கலங்கி அழிவது பேதைமைத் தன்மையாகும். அவ்விதி பிரமனின் தலையையும் அறுத்தலைச் செய்த ஆற்றல் உடையது என்று உணர்ந்து ஆறுதல் அடைய வேண்டும் என்பது கருத்து. சிவபிரான் பிரமனின் ஐந்து தலைகளில் ஒன்றைக் கிள்ளிக் களைந்தான் என்பது புராணச் செய்தி. இழுதை - பேதைமை, அறியாமை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'When a sorrow, known to come from fate, arrives and takes hold,
- to let it set the mind on fire and so be ruined is the way of fools;
- for fate, which cut off the head of the one who divided
- and brought into being all the worlds, can anything be too hard?'
What the poem says
Caṭāyu continues: once we know a sorrow comes from fate, letting it burn up the mind until we are destroyed is simple foolishness. Fate is so powerful that it even brought about the cutting off of a head of Piramaṉ, the creator who shaped and divided the worlds.
The allusion is to the Purāṇic story in which Civaṉ nipped off one of Piramaṉ's five heads. If even the creator could not escape fate, humans should accept what comes and take comfort.