கம்பராமாயணம் 3597 · ஆரணிய 8.195
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அலக்கணும் இன்பமும் - துன்பமும் இன்பமும்; அணுகும் நாள் - வரும் காலத்து; அவை - அந்த இன்ப துன்பங்களை; விலக்குவம் என்பது - (நாம் வராமல்) தடுத்து விடுவோம் என்பது; மெய்யிற்று ஆகுமோ - உண்மை உடையதாகுமா? (ஆகாது); முப்புரங்களை - முப்புரத்தை; இலக்கு எய்த - இலக்காக்கித் தொடுத்து (அழித்து); வில்லியார் - வில்லை ஏந்தியவரான சிவபெருமான்; தலைக்கலத்து இரந்தது - பிரமனது மண்டை ஓட்டில் பிச்சை எடுத்தது; தவத்தின் பாலதோ - தவச் செயலுக்கு உரியதோ? (அன்று)
நமக்கு வரும் இன்ப துன்பங்களை நாம் வராமல் விலக்கி விடலாம் என்று கூறுவது உண்மை ஆகுமோ? அவ்வாறாயின் முப்புரம் எரித்த சிவபிரான் மண்டை ஓட்டில் பிச்சை எடுத்ததை எவ்வகைத் தவம் என விளக்குவது என்றவாறு. அது தவத்தின் விளைவு அல்ல விதியின் விளைவே ஆகும் என்பதாம். சினத்தால் பிரமனின் தலையைக் கிள்ளிய சிவன், பிரம தோசத்தால் மண்டையோட்டில் பிச்சை ஏற்றுத் திரிந்தமையை இங்குச் சடாயு குறிப்பிடுகின்றான். அலக்கண் - துன்பம், தலைக்கலம் - பிரமனது மண்டை ஓடு. விலக்குவம் - தன்மைப் பன்மை வினைமுற்று. தலைக்கலம் - இருபெயரொட்டு.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'When the day comes for sorrow and joy to draw near,
- can it be true that we will keep them away?
- The archer who shot the Three Cities as his target
- went begging with a skull for his bowl: did that come from his penance?'
What the poem says
Caṭāyu argues that no one can simply ward off joy and grief when their time arrives. His example is Civaṉ himself, the archer who destroyed the Three Cities of the demons.
After Civaṉ in anger nipped off Piramaṉ's head, the sin clung to him and he had to wander begging with Piramaṉ's skull as his bowl. That was not the fruit of austerity, says Caṭāyu, but the working of fate.