கம்பராமாயணம் 3598 · ஆரணிய 8.196

Section ஆரணிய காண்டம் / 8. சடாயு உயிர் நீத்த படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1''
''

பொருள் · Meaning in Tamil

பொங்கு வெங்கோள் அரா - (சினம்) பொங்குகிற கொடிய கொலைத் தொழிலை உடைய பாம்பாகிய (கேது); விசும்பு பூத்தன - ஆகாயத்தில் பூத்து விளங்குகிற, வெங்கதிர்ச் செல்வனை - வெப்பக் கதிர்களைச் செல்வமாகக் கொண்ட கதிரவனை; விழுங்கி நீங்குமால் - விழுங்கி உமிழும்; அம் கண் மா ஞாலத்தை - இடம் அகன்ற பெரிய நிலவுலகத்தை; விளக்கும் - தன் ஒளியால் விளங்கச் செய்கிற; ஆய்கதிர்த் திங்களும் - சிறந்த ஒளிக்கற்றைகளை உடைய நிலவும், ஒரு முறை வளரும் தேயும் - (மாதந்தோறும்) ஒரு முறை வளர்ந்து, ஒரு முறை தேய்தலும் செய்யும்.

கதிரவனைக் கோள் அராத் தீண்டி மறைத்தலும், நிலவு வளர்ந்து தேய்வதும் விதியின் பயன் என்றவாறு. கதிரவனை அராத் தீண்டுதற்குக் காரணமாகப் புராணக் கதையைக் குறிப்பிடுவர். கோள் அரா - குறித்த இலக்கைக் கொல்வதில் தவறாத பாம்பு, கோள் - முதல் நிலை நீண்ட தொழிற் பெயர். மாஞாலம் - உரிச்சொல் தொடர். ஆல் இரண்டும் அசை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'The fierce seizing serpent, swelling with rage,
  2. swallows the lord of hot rays who blossoms in the sky, and then lets him go;
  3. and the moon of fine rays, which lights the wide, great earth,
  4. waxes once and wanes once.'

What the poem says

Caṭāyu points to the heavens. Even the sun is swallowed for a time by the eclipse serpent and then released, and the bright moon that lights the whole earth must grow and shrink every month.

If the greatest lights in the sky are subject to such reversals, it is by fate, and mortals should not expect to escape them. The eclipse image draws on the Purāṇic story of the serpent planet that seizes the sun.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'' poṅku veṅkōḷ arā, vicumpu pūttaṉa
veṅkatirc celvaṉai viḻuṅki nīṅkumāl;
am kaṇ mā ñālattai viḷakkum āy katirt
tiṅkaḷum oru muṟai vaḷarum, tēyumāl. ''