கம்பராமாயணம் 3599 · ஆரணிய 8.197
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
சுந்தரத் தோளினிர் - அழகிய தோள்களை உடையவர்களே; அந்தரம் வருதலும் - (ஒருவனுக்குத்) தீங்குகள் வந்து சேர்வதும்; அனைய தீர்தலும் - அவை நீங்குவதும்; தொன்மை நீரவால் - தொன்று தொட்டு வந்தமைகிற ஊழ்வினையின் தன்மையவாகும்; இமையவர் மந்திர குருவின் - தேவர்களுடைய மந்திரவலிமை மிக்க குருவாகிய பிரகசுபதியின்; வாய்மொழி - வாயில் இருந்து வந்த சாபச் சொற்களால்; இந்திரன் உற்றன - தேவர் தலைவனாகிய இந்திரன் அடைந்த துன்பங்களை; எண்ண ஒண்ணுமோ - எண்ணிப் பார்க்க முடியுமோ என்றபடி (முடியாது என்பது கருத்து)
தொன்று தொட்டு வருகின்ற ஊழ்வினையின் பயனால் தான் ஒருவனுக்குத் துன்பங்கள் வந்து சேருகின்றன. இதை விளக்க இந்திரன் பட்ட துன்பங்களைக் கூறும் புராணச் செய்தி கூறப்படுகிறது. அந்தரம் - துன்பம், நீங்கு, நீரவால் - தன்மையவாம் அனைய, உற்றன - வினையாலணையும் பெயர்கள். இமையவர் குரு - பிரகஸ்பதி.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'The coming of misfortunes and their passing away,
- O you of handsome shoulders, are the ancient way of fate;
- can one even count the sufferings that Intiraṉ endured
- through the words spoken by the gods' guru, master of mantras?'
What the poem says
Addressing the brothers as men of handsome shoulders, Caṭāyu says that troubles come and go according to fate, as they always have.
His example is Intiraṉ, king of the gods, who suffered countless hardships because of a curse spoken by Pirakaspati, the gods' own preceptor. If the lord of heaven could not escape the effects of such words, mortals should bear their own misfortune with patience.