கம்பராமாயணம் 3600 · ஆரணிய 8.198
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பகழி வில் வலாய் - அம்புகளை விடும் வில் தொழில் ஆற்றலில் வல்லவனே; தடைக்க அரும் பெருவலி - தடுப்பதற்கு முடியாத மிக்க வலிமை உடைய; சம்பரப் பெயர் - சம்பரன் என்ற பெயர் உடைய; கடைத் தொழில் அவுணனால் - இழி தொழிலைச் செய்யும் அவுணனால்; குலிசக்கையினான் - வச்சிராயுதத்தைக் கையில் ஏந்திய இந்திரன்; பழி படைத்தனன் - (தோல்வி அடைந்து ஆட்சியை இழத்தலாகிய) பழியை அடைந்தான்; அது - அப்பழியை; நுந்தை - உன் தந்தையாகிய தசரதன்; தன் குவவுத் தோளினால் - தன் திரண்ட தோள்களின் வலிமையால்; துடைத்தனன் - நீக்கினான்.
இந்திரன் சம்பரன் என்ற அசுரனால் அடைந்த பழியை உன் தந்தையாகிய தசரதன் தன் தோள் வலிமையால் போக்கினான் என்பது கருத்து. தடைக்க - தடுக்க, கடைத் தொழில் - கீழான தொழில், குலிசம் - வச்சிராயுதம், நுந்தை - உன் தந்தை தசரதன், குவவு - திரட்சி.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Through the demon named Camparaṉ, doer of base deeds,
- whose great strength was hard to withstand, the one with the thunderbolt in his hand
- earned disgrace; and that disgrace, O master of arrow and bow,
- your father wiped away with his mighty, rounded shoulders.'
What the poem says
Caṭāyu continues the example of Intiraṉ. Even the king of the gods, wielder of the thunderbolt, was defeated and shamed by the powerful demon Camparaṉ.
It was Irāmaṉ's own father Tacarataṉ who removed that shame by the strength of his arms. Caṭāyu, an old friend of Tacarataṉ, reminds Irāmaṉ of his father's glory: even the mighty fall into trouble, and help comes in its time.