கம்பராமாயணம் 36 · பால 2.16
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
கறுப்புறு மனமும் - சினம் மிகுந்த மனமும்; கண்ணில் சிவப்புறு சூட்டும் - கண்களைவிடச் சிவந்த கொண்டையையும்; காட்டிப் - புலப்படுத்தி; உறுப்புறு படையின் தாக்கி - காலில் கட்டிய கத்தியினால் எதிர்க்கும் சேவலைத் தாக்கி; உறு பகை இன்றிச் சீறி - தமக்குள் முன்பகை இல்லாமலே சினம் காட்டி, வெறுப்பு இல - போர் செய்வதில் வெறுப்பு இல்லாதவனாய்; வீர வாழ்க்கை மறுப்பட - வீர வாழ்க்கைக்கு மாசு உண்டாகுமாயின்; ஆவி பேணா - உயிரையும் பெரிதாகப் போற்றாத; வாரணம் - சேவல்களை; பொருத்துவாரும் - போரிடும்படிச் செய்பவர்களும்...
கறுப்பு: சினம். 'கறுப்பும் சிவப்பும் வெகுளிப் பொருள்' என்பது தொல்காப்பியம். (தொல். சொல். உரி. 74). சூடு: சேவல் கொண்டை உறுப்பு: இங்கே கால்களாகிய உறுப்பு. உறுப்புறு படை என்பதற்குக் கால்களும் மூக்கும் ஆகிய உறுப்புகள் என்றும் கொள்ளலாம். 'காலாயுதம்' என்றே சேவலுக்கு ஒரு பெயருண்டு.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Showing hearts black with rage and combs redder than their eyes,
- striking with the weapons on their limbs, flaring up with no old feud between them,
- never tiring of the joy of fierce battle, cocks that will not cherish life
- if their warrior's name is stained: there are those who set them to fight.
What the poem says
The list of pastimes continues with cockfighting. The fighting cocks are drawn as true warriors. Their hearts burn with anger, their combs are redder than their eyes, and they strike with the blades tied to their legs. They have no grudge against each other yet fight with fury, never weary of battle, and would rather die than live with their warrior honour stained.
In old Tamil both "black" and "red" can express anger. The cock is even called "the one whose weapon is its foot".