கம்பராமாயணம் 37 · பால 2.17

Section பால காண்டம் / 2. நாட்டுப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1எருமை நாகு ஈன்ற செங்கண் ஏற்றை ஓடு ஏற்றை, சீற்றத்து
உரும் இவை என்னத் தாக்கி ஊழ் உற நெருக்கி ஒன்றாய்
விரி இருள் இரண்டு கூறாய் வெகுண்டன அனைய நோக்கி
அரி இனம் குஞ்சி ஆர்ப்ப மஞ்சு உற ஆர்க்கின்றார் உம்.

பொருள் · Meaning in Tamil

எருமை நாகு ஈன்ற - பெண் எருமைகள் பெற்ற; செங்கண் ஏற்றையோடு ஏற்றை - சிவந்த கண்களை உடைய கடாவோடு மற்றொரு கடா; 'சீற்றத்து உரும் இவை' என்னத் தாக்கி - 'கோபம் கொண்ட இடிகள் இவை' என்று சொல்லும்படியாக மோதி, ஊழுற நெருக்கி - முறையாக நெருங்கி; ஒன்றாய் விரி இருள் - எங்கணும் ஒரே பொருளாய் விரிந்திருக்கின்ற இருட்பிழம்பு; இரண்டு கூறாய் - இரண்டு பகுதிகளாகப் பிரிந்து நின்று; வெகுண்டன - ஒன்றோடு ஒன்று கோபம் கொண்டு பொருதன; அதனை நோக்கி - அந்தப் போரைக் கண்டு; குஞ்சி அரி இனம் ஆர்ப்ப - தலை முடியில் அணிந்த மலர்களில் இருந்த வண்டுகளின் கூட்டம் (கலைந்து) ஆரவாரம் செய்யும்படியாக; மஞ்சு உற ஆர்க்கின்றாரும் - தமது குரல் மேகமண்டலம் வரை செல்லும்படி ஆரவாரம் செய்பவர்களும்...

எங்கும் பரவியுள்ள ஒரே பிழம்பு இரண்டு கூறாகப் பிரிந்து தம்முள் மோதுவது போல எருமைக் கடாக்கள் காணப்படுகின்றன. ஒரே நிறம், ஒரே தரம், உருவம் மட்டுமே இரண்டு. அவை மோதிப் பொருவதைப் பார்த்து வீரர்கள் மகிழ்ந்து ஆர்ப்பரிக்கின்றனர். எருமையில் பெண் நாகு என வழங்கும். 'எருமையும் மரையும் பெற்றமும் நாகே' (தொல் பொருள். மரபு 63). எருமை நாகு; இருபெயரொட்டுப் பண்புத் தொகை. ஏற்றை என்பதில் ஐகாரம் சாரியை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Red-eyed bulls born of buffalo cows, one bull against another, in their fury
  2. clashing as if they were thunderbolts, pressing each other in turn, as though
  3. the one wide darkness had split in two and raged at itself; watching this,
  4. there are those who roar up to the clouds, till the bees in their hair rise humming.

What the poem says

Another pastime is the buffalo fight. Two black bull buffaloes charge and lock horns like thunderbolts. They are so alike in colour and strength that it seems as if the single darkness that fills the world had split into two halves and turned on itself. The watching men shout so loudly that their cries reach the clouds, and the bees resting in the flowers in their hair fly up in alarm.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1erumai nāku īṉṟa ceṅ kaṇ ēṟṟaiyōṭu ēṟṟai, cīṟṟattu
urum ivai eṉṉat tākki ūḻuṟa nerukki oṉṟāy
viri iruḷ iraṇṭu kūṟāy vekuṇṭaṉa ataṉai nōkki
ari iṉam kuñci ārppa mañcuṟa ārkkiṉṟārum.