கம்பராமாயணம் 38 · பால 2.18

Section பால காண்டம் / 2. நாட்டுப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

முள்ளரை முளரி - முள் கொண்ட தண்டினை யுடைய தாமரையின்; வெள்ளி முளை இற - வெண்மையான முனை ஒடியவும்; முத்தும் பொன்னும் தள்ளுற - நிலத்தி லிருந்து முத்தும் பொன்னும் ஒதுக்கித் தள்ளப்படவும்; மணிகள் சிந்த - பல வகை மணிகள் சிந்தவும், சலஞ்சலம் புலம்ப - சலஞ்சலம் என்ற சங்கு புலம்பவும்; சாலில் மீன் துள்ளித் துடிப்ப - கொழுமுனையில் புரளும் மண் திரளில் மீன்கள் துள்ளித் துடிக்கவும்; ஆமை தலை புடை சுரிப்ப - ஆமைகள் தலையையும் கால்களையும் ஓட்டுக்குள் சுருக்கக் கொள்ளவும்; தூம்பின் உள் வரால் ஒளிப்ப - மதகுகளினுள் வரால் மீன்கள் ஒளிந்து கொள்ளவும்; உழு பகடு மள்ளர் உரப்புவாரும் - உழுகின்ற எருதுகளை ஓட்டி அதட்டுகின்ற உழவர்களும் (அந்நாட்டில் உள்ளனர்).

தாமரைத் தண்டில் முள் உண்டென்பதை 'முள்ளரைத் தாமரை முகிழ் விரி நாட்போது' (சிறுபாண். 183) என்னும் நத்தத்தனார் வாக்காலும் 'முள்ளை உடைத்தாகிய தண்டினையுடைய வெண்டாமரையினது அரும்பு விரிந்த நாட்காலத்திற் பூ' என்னும் நச்சினார்க்கினியர் உரையாலும் உணரலாம். வெள்ளி: வெள்ளை நிறம். சலஞ்சலம்: சங்கில் ஒரு வகை. புடை: பக்கம்: இங்கே ஆகுபெயராய் ஆமையின் பக்கங்களில் உள்ள கால்களைக் குறித்தது. 'பொருத்துவாரும்' (44) முதலாக 'உரப்பு வாரும்' (49) முடிய உள்ள உம்மைச் சொற்களோடு 'உள்ளனர்' என்ற முற்றை வருவித்து முடிக்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. So that the silver shoots of thorny-stemmed lotuses snap, pearls and gold
  2. are pushed aside, gems are scattered, the calañcalam conches wail, and in the furrow
  3. fish leap and writhe, tortoises pull in their heads and limbs, and inside the sluices
  4. the murrel fish hide: there are farmhands who shout at the oxen as they plough.

What the poem says

The list of the people's activities ends with ploughing. As the plough cuts through the wet fields, it snaps the white shoots of lotuses with their thorny stems. It turns up pearls, gold and gems and sets the conches crying out. Fish leap in the furrows, tortoises pull in their heads and legs, and murrel fish hide in the sluice channels. Through it all the farmhands shout at their oxen.

This verse completes the long sentence that began several verses earlier: in Kōcalam there are people who do all these things.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1muḷḷaraimuḷari veḷḷi muḷai iṟa muttum poṉṉum
taḷḷuṟa, maṇikaḷ cinta, calañcalam pulampa, cālil
tuḷḷi mīṉ tuṭippa, āmai talai puṭai curippa, tūmpiṉ-
uḷ varāl oḷippa, maḷḷar uḻu pakaṭu urappuvārum.