கம்பராமாயணம் 3621 · ஆரணிய 8.219
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
எந்தை - என் தலைவனே; நீ எண்மையன் ஆகி - நீ எளிய தன்மையன் ஆகி; ஏழைச் சந்தவார் குழலினாளை - பேதைமை உடைய அழகிய நீண்ட கூந்தலை உடைய சீதையை; துறந்தனை தணிதியேனும் - கைவிட்டுச் (சற்றது தணிவு கொள்வாய் என்றாலும், உந்தையை - உனது தந்தையாகிய சடாயுவை; உயிர் கொண்டானை - உயிர் கொண்டவனாகிய அரக்கனை; உயிருண்ணும் ஊற்றம் இல்லா - உயிர் கொல்லும் மன வலிமை இல்லாத; சிந்தையை ஆகி நின்று - மனத்தை உடையவனாய் நின்று; செய்வது செய்கை என் - செய்யக்கூடிய செயல் எது உள்ளது; இயம்பிற்று என்னை - நீ சொல்லியது என்ன, (அது சரியல்ல); என்றான் - என்று இலக்குவன் கூறினான்.
சீதையைக் கவர்ந்து சென்ற இராவணனை நீ கொல்ல வேண்டும் அவ்வாறன்றி நீ மனம் கலங்கி அவளை முற்றும் துறக்கக் கருதினை எனினும், தந்தையாகிய சடாயுவைக் கொன்ற குற்றத்துக்காகவாவது அவனைக் கொல்ல வேண்டும் என்று இலக்குவன் இராமனிடம் கூறினான். எண்மையன் - எளிய தன்மையன். ஏழை - அறியாமையாகிய பேதமைப் பண்பு உள்ளவள். சந்தம் - அழகு. வார் - நீண்ட. ஊற்றம் - வலிமை. நீ இயம்பிற்று என்னை - 'ஆண்மை தீர்ந்தேன், துறந்தனென், தவம் செய்கேனோ? துறப்பெனோ உயிரை? என் செய்கேன் இளவல்' (3532) என்று மனங் கலங்கிக் கூறியதை உட்கொண்டு உரைத்தது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'My lord, what is this you have said? Even if, growing faint of heart, you were to give up
- the innocent one with lovely long tresses and so find some calm,
- to stand there with a mind that lacks the resolve to take the life
- of him who took your father's life: what kind of conduct is that?' he said.
What the poem says
Ilakkuvaṉ presses his argument. He rejects Irāmaṉ's talk of renouncing the world or dying.
Even supposing Irāmaṉ, in weakness, could give up Cītai herself, he would still have to kill Irāvaṇaṉ for murdering Caṭāyu, a father to him. To sit with a mind lacking the will to take that life is no way for a son to behave.