கம்பராமாயணம் 3620 · ஆரணிய 8.218
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
என்றலும் - என்று இராமன் கூறிய உடனே; இளைய கோ - இளையவனாகிய இலக்குவன்; அவ் இராமனை இறைஞ்சி - அந்த இராமனை வணங்கி; வென்றியாய் - வெற்றியை உடையவனே; யாண்டும் - எப்பொழுதும்; விதியின் தன்மை - ஊழ்வினையின் தன்மையால், பழி அல - பழி தவிர; விளைந்தது ஒன்றோ - (ஒருவனுக்கு) வந்த தீமை (ஏதாவது) உண்டோ?; இனி நின்று நினைவது என்னே - இனிமேல் நின்று (நீடு) நினைப்பதற்கு என்ன காரணம் உள்ளது; அவ் அரக்கர் தம்மை நெருக்கி - அந்த அரக்கர்களைப் (போரில்) நெருக்கிக், கொன்ற பின் அன்றோ - கொன்ற பிறகல்லவா?; வெய்ய கொடுந்துயர் குளிப்பது - மிகக் கொடிய துன்பத்தில் மூழ்க வேண்டும்; என்றான் - (என்று இலக்குவன் இராமனிடம்) கூறினான்.
ஊழ்வினையால் மட்டுமே தீங்கு வரும். அத்தீங்கை நம்மால் தடுத்தலும் ஒல்லாது. எனவே துயரப் பட்டுப் பலனில்லை. செய்ய வேண்டுவது அரக்கரை நெருக்கி அழித்தலே என்றான் இலக்குவன். இப்பாடலில் அந்தாதி அமைப்பைக் காண்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- When he said this, the younger prince bowed before Irāmaṉ: 'O you who are victorious
- always, by the way of fate, has anything befallen us but disgrace?
- Why stand here now and brood? Is it not after we have crushed those demons
- and killed them that we should plunge into fierce and bitter grief?' he said.
What the poem says
Ilakkuvaṉ now does for Irāmaṉ what Caṭāyu did a moment ago: he bows and talks him back to resolve. What has happened is the work of fate, which no one can prevent, so dwelling on it achieves nothing.
The right order of things is to hunt down and kill the demons first; there will be time for grief afterwards.