கம்பராமாயணம் 3627 · ஆரணிய 8.225

Section ஆரணிய காண்டம் / 8. சடாயு உயிர் நீத்த படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வெல் வகைக் குமரன் - வெற்றி பெறும் வகையறிந்த சக்கரவர்த்தித் திருமகனாகிய இராமன்; பல்வகைத் துறையும் - நீத்தார்க்குரிய பலவகைச் சடங்குகளையும்; வேதப் பலிக் கடன் பலவும் - வேத விதிப்படி செய்ய வேண்டிய பிண்டபலி முதலிய கடமைகள் பலவற்றையும், முற்றி நின்ற வேலையின் - முடித்து நின்ற பொழுதில்; வெய்யோன் - வெப்பம் மிக்க கதிர்களை உடைய கதிரவன்; தொல்வகைக் குலத்தின் வந்தான் - தொன்று தொட்டு வரும் சூரிய குலத்தில் தோன்றிய (இராமனது); துன்பத்தால் - (சடாயுவை இழந்து துன்பத்துக்காக; புனலும் தோய்ந்து - (தான்) நீரில் ஆடி; செல் வகைக்கு உரிய எல்லாம் செய்குவான் என்ன - (சடாயு) செல்லும் கதிக்குத் தேவையான (சடங்குகளை) எல்லாம் செய்பவன் போல; வேலை சார்ந்தான் - கடலில் (சென்று) மறைந்தான்.

இராமன் நீத்தார் கடன்களை முறையாகச் செய்து முடித்த வேளையில், கதிரவன் அவனது துன்பத்தைக் கண்டு பொறுக்காது தானும் புனலாடிச் சடங்கு செய்பவன் போல் கடலில் சென்று மறைந்தான் என்பதாம். தொல்வகைக் குலத்தின் வந்தான் என்பது சடாயுவைக் குறிக்கும் என்பாருமுளர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. When he had completed the many kinds of rites and the many offerings due by the Veda,
  2. at the time the victorious prince stood there, he went down to the sea,
  3. as though, for grief at the sorrow of the one born of the ancient line, he too would bathe in the water
  4. and perform everything due for the departed one's journey: the burning sun.

What the poem says

This verse closes the episode of Caṭāyu's death. Irāmaṉ completes all the funeral rites and offerings prescribed by the Veda.

At that very moment the sun sets into the western sea. The poet imagines that the sun, ancestor of Irāmaṉ's solar dynasty, is grieving with his descendant and goes down into the water to bathe and perform rites for Caṭāyu too. Some take 'the one born of the ancient line' to mean Caṭāyu rather than Irāmaṉ.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1pal vakait tuṟaiyum, vētap palik kaṭaṉ palavum muṟṟi,
vel vakaik kumaraṉ niṉṟa vēlaiyiṉ, vēlai cārntāṉ,
tol vakaik kulattiṉ vantāṉ tuṉpattāl, puṉalum tōyntu,
cel vakaikku uriya ellām ceykuvāṉ eṉṉa, veyyōṉ.