கம்பராமாயணம் 3626 · ஆரணிய 8.224
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
விரிஞ்சனே முதல - பிரமனை முதலாகக் கொண்ட; மேல் கீழ் காட்டிய உயிர்கள் எல்லாம் - உயர்ந்தவை தாழ்ந்தவை என்று எடுத்துக் காட்டப் பட்ட உயிரினங்களெல்லாம்; அருந்தின களித்த போலாம் - (இராமன் சடாயுவுக்குக் கொடுத்த நீர்க்கடனை அருந்தினவையாய் மகிழ்ந்தவை போலாயின; அப்புள்ளினுக்கு அரசை - அந்தப் பறவைகளுக்கு அரசனாகிய சடாயுவை; 'கொள்க' என்று - (நீ) ஏற்றுக் கொள்க' என்று கூறி; பூட்டிய கைகளால் - (தன்) இணைத்த கைகளால், ஊட்டிய நல்நீர் - உண்பித்த (நீர்க்கடனுக்கு உரிய) நல்ல நீர்; ஐயன் உண்ட நீர் ஒத்தது - (அனைத்துயிர்க்கும்) தலைவன் ஆகிய திருமால் (தானே) உட்கொண்ட நீரைப் போன்றதாயிற்று, மீட்டு இனி உரைப்பது என்னே? - வேறு கூற என்ன உள்ளது. (என்றவாறு.
சடாயுவுக்கு இராமன் நீர்க்கடன் செய்தபோது சடாயுவின் உயிரன்றி அனைத்து உயிர்களும் அதனை உண்டு மகிழ்ந்தன. இது திருமாலே நீருண்டது போன்றது என்றார். சொரூபி உண்டது சொரூபங்கள் உண்டன போல் ஆனது என்றவாறு. விரிஞ்சன் - பிரமன், பூட்டிய கைகள் - சேர வைத்த கைகள், நல்நீர் - ஐயனே ஊட்டியதால் நல்நீர் எனப்பட்டது. காட்டிய - பெயரெச்சம், அருந்தின - முற்றெச்சம், அன்று, ஏ - அசைகள். ஏகாரம் தேற்றம்; அன்றே தேற்றேகாரமாகக் கொண்டும் பொருள் கொள்ளலாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- What more is there to say? All the creatures, from Viriñcaṉ down, those named above and below,
- seemed to have drunk it and rejoiced;
- for the good water he gave with joined hands to the king of birds, saying 'Receive this,'
- was like water drunk by the Lord himself.
What the poem says
When Irāmaṉ offers the funeral water to Caṭāyu with cupped hands, saying 'Accept this', it is as if every creature in the universe, from Piramaṉ in the highest heaven to the lowest being, drank it and was satisfied.
The reason is theological: Irāmaṉ is Tirumāl, the Lord in whom all beings exist. Water offered by him is like water taken by the Lord himself, and what the Lord receives, all his forms receive.