கம்பராமாயணம் 3625 · ஆரணிய 8.223

Section ஆரணிய காண்டம் / 8. சடாயு உயிர் நீத்த படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1தளிர்த்தன களித்த பச்சைத் தாமரைக் கெழுவு செம் பூ
துளித்தன அனைய என்னத் துள்ளி சோர் வெள்ளக் கண்ணன் ,
குளித்தனன் கொண்டல் ; ஆற்றுக் குளித்தபின் , கொண்ட நன்னீர்
அளித்தனன் ; அரக்கர்ச் செற்ற சீற்றத்தான் அவலம் தீர்ந்தான் .

பொருள் · Meaning in Tamil

அரக்கர்ச் செற்ற சீற்றத்தான் - அரக்கர்களை அழிக்க வேண்டும் என்ற சினத்தினால்; அவலம் தீர்ந்தான் - (சீதையைப் பிரிந்த) துன்பத்தை நீக்கியவனாகிய இராமன்; தளிர்த்தன கிளர்ந்த மேனி - தளிரின் நிறத்தன்மை உடைய செழிப்பொடு கூடிய (தன் உடலில்; தாமரைக்கெழுமு செம்பூ - தாமரையின் செழிந்த சிவந்த மலர்; துளித்தன அனைய என்ன - (தேன் துளிகளைத் துளிர்த்ததை ஒத்தது என்னுமாறு; துள்ளி சோர் வெள்ளக் கண்ணன் - துளியாக வடிதநெ கண்ணீர்ப் பெருக்கு உடையவனாய்; கொண்டல் ஆற்றுக் குளித்தனன் - மேகம் ஆற்றில் படிவதைப் போல (ஆற்றில்) குளித்தான்; குளித்த பின் - குளித்து முடித்த பிறகு; கொண்ட நல் நீர் அளித்தனன் - (தன் கையில் கொண்ட) நல்ல நீரை நீர்க்கடனாகக் கொடுத்தான்.

இராமன் கண்களுக்குத் தாமரை மலரும் அவன் கண்களில் இருந்து வழியும் கண்ணீருக்கு அம்மலரில் இருந்து வெளிப்படும் தேனும் உவமைகளாயின. இராமன் ஆற்றில் மூழ்கிக் குளித்தது, ஆற்றில் மேகம் படிந்தது போன்றது என்றவாறு. கொண்டல் - மேகம் போன்ற இராமன், துள்ளி - விரித்தல் விகாரம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As if red lotus blossoms, set thick upon a body glowing like tender leaves,
  2. were dripping honey, he wept floods of tears that fell in drops;
  3. the cloud-dark one bathed in the river, and after bathing offered the good water he took up;
  4. then, his wrath fixed on destroying the demons, he put an end to his grief.

What the poem says

Irāmaṉ weeps as he completes the rites. His eyes are like red lotuses on his body, which glows like young leaves, and his falling tears are like honey dripping from the flowers.

He bathes in the river, like a dark cloud settling on the water, and offers the water-oblation for the dead. Then, turning his grief into the resolve to destroy the demons, he puts sorrow aside.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1taḷirttaṉa kiḷarnta mēṉit tāmaraik keḻumu cempūt
tuḷittaṉa aṉaiya eṉṉat tuḷḷi cōr veḷḷak kaṇṇaṉ,
kuḷittaṉaṉ koṇṭal; āṟṟuk kuḷittapiṉ, koṇṭa nal nīr
aḷittaṉaṉ; arakkarc ceṟṟa cīṟṟattāṉ avalam tīrntāṉ.