கம்பராமாயணம் 3624 · ஆரணிய 8.222
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
நிரம்பும் நல்நூல் மந்திர நெறியின் வல்லான் - நிறைந்த நல்ல நூல்களாகிய சாத்திரங்களின் முறையில் வல்லவனாகிய இராமன்; நீரும் சாந்தொடு மலரும் சொரிந்தனன் - நீரையும் சந்தனத்தையும் மலரையும் (உரிய முறைப்படி) பயன்படுத்திச் (சடாயுவின் உடலுக்கு இட்டு); இருகை தன்னால் ஏந்தினன் - அவ்வுடலைத் தன் இரண்டு கைகளாலும் எடுத்து; ஈமம் தன்மேல் ஏற்றினன் - (விறகுகள் அடுக்கப்பட்ட) ஈம மணல் மேடையின் மேல் ஏற்றி; தலையின் சாரல் காந்து எரி கஞல மூட்டி - தலைப் பக்கத்தில் எரிகிற நெருப்பைப் பற்ற வைத்து; கடன் முறை கடவா வண்ணம் - செய்ய வேண்டிய கடமைகளை முறை தவறாதவாறு; நேர்ந்தனன் - செய்தான்.
சடாயுவின் உடலுக்கு, நீரும், சந்தனமும், மலரும் இட்டு அலங்கரித்து, இரு கையில் ஏந்தி, ஈம மணல் மேடையில் ஏற்றித் தலைப் பக்கத்தில் எரிகிற நெருப்பைப் பற்ற வைத்து, செய்ய வேண்டியவற்றை முறை தவறாது இராமன் செய்தனன் என்க. சாரல் - பக்கம், கஞலுதல் - நெருங்குதல்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- He bore him up in his two hands and laid him upon the pyre;
- he poured out sandal paste, flowers and water; at the side of the head
- he kindled the blazing fire till it crowded close, and, never straying from the order of the rites,
- he carried them out, he who was master of the way of mantras in the full and noble scriptures.
What the poem says
Irāmaṉ, learned in the scriptures and their ritual formulas, performs the funeral as a son would. He anoints the body with water, sandal paste and flowers, lifts it with both hands onto the pyre, and lights the fire at the head.
Every rite is carried out in its proper order, without omission. A prince honouring a bird as his own father is one of the most moving moments of the Āraṇiya Kāṇṭam.