கம்பராமாயணம் 3629 · ஆரணிய 9.2
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
கானமும் மலையும் எல்லாம் - காடுகளும் மலைகளும் ஆகிய எல்லாமும், தெருமரல் உறுவ போல - (இராமலக்குவர் துன்பத்துக்கு) மனச்சுழற்சி அடைபவைபோல; தேன் உக அருவி சிந்தி - தேனினையும் அருவி நீரினையும் ஒழுக விடுவதால்; கண்ணின் நீர் உகுக்கும் - (அவை) கண்ணீர் வெளிப்படுவது போல் வெளிப்படும்; கங்குல் - அன்று இரவிலே; மானமும் - (சீதையை இராவணன் கவர்ந்து சென்றதால் ஏற்பட்ட) அவமானமும்; சினமும் - அந்த (இராவணன் மீது தோன்றிய) சினமும்; தாதை மரணமும் - தந்தையாகிய சடாயுவின் மரணத்தால் (ஏற்பட்ட மனத் துயரமும்); ஞானமும் - நல்லறிவும்; துயரமும் - துன்பமும், தம்முள் மலைந்தென - தங்களுக்குள் (முரண்பட்டும்) போரிட்டது போல; மைந்தர் சிந்தை - வலிமையுடைய இராமலக்குவர்களுடைய மனத்தில்; நலிந்த - தாக்கி வருத்தின.
காடும் மலையும் இராமலக்குவர் துன்பத்துக்கு வருந்துபவை போல் தேனையும் அருவி நீரையும் சொரிந்தன. அவர்களுடைய மனத்தில் அவமானமும், சினமும், துயரமும் மோதியது. நல்லறிவும் துன்பமும் தம்முள் மாறுபட்டுப் போர் புரிவதைப் போல் அவர்களை வருத்தின. தெருமரல் - மனச் சுழற்சி, "அலமரல் தெருமரல் ஆயிரண்டும் சுழற்சி" என்பர் தொல்காப்பியனார் (தொல் சொல் உரி 13). கங்குல் - இரவு, மானம் - அவமானம், ஞானம் - தூய அறிவு, அன்று, ஏ - அசைகள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As if in anguish, letting honey and waterfalls stream down,
- the forests and the mountains all shed tears; in that night,
- shame and anger and their father's death, in the minds of the sons,
- together with wisdom and grief, as though warring with one another, tormented them.
What the poem says
Nature mourns with the brothers: the honey dripping from hives and the waterfalls pouring down the mountain look like the forest and hills weeping.
Inside Irāmaṉ and Ilakkuvaṉ, a battle rages through the night: humiliation at Cītai's abduction, anger against Irāvaṇaṉ, grief for Caṭāyu, and their own wisdom trying to master that grief, all fighting each other and wearing them down.