கம்பராமாயணம் 3630 · ஆரணிய 9.3

Section ஆரணிய காண்டம் / 9. அயோமுகிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மெய் உற உணர்வு செல்லா - தத்துவ ஞானத்தின் கண் உணர்வு பொருந்தியமையாத; அறிவினை - அறிவை; வினையின் நூக்கும் - தீவினையின் கண் செலுத்துகிற; பொய் உறு பிறவிபோல - பொய்மைத் தன்மை மிக்க பிறப்புப் போல; போக்க அரும் பொங்கு கங்குல் - நீக்க முடியாது மேன் மேல் வளருகிற (அந்த) இராக்காலத்தின் கண்; உயிர்ப்பு - பெருமூச்சு; நெய் உறு நெருப்பின் வீங்கி நிமிர்தர - நெய் சொரியப்பெற்ற நெருப்பைப் போல மிக ஓங்கி நிற்க; நீள கை அறவு உறுகின்றார் - நீண்ட செயலறுதலை அடைகின்றார்கள்; காணல் ஆம் கரையிற்று அன்றே - (அந்நிலை நம்மால்) காணத்தகுந்த எல்லையுடையது அன்று.

தத்துவஞானமுடையவரன்றிப் பிறரால் நீக்க முடியாத பிறவி போல, மன உறுதி இல்லாமையால் இராமலக்குவரின் துன்பம் நீக்க முடியாது உள்ளது என்றவாறு. பிறவியை இருளாகக் கூறும் கவி மரபை எண்ணுக. காணல் ஆம் கரையிற்று என்பதை இரவுக்கு இணைத்துத் துன்பத்தால் வருந்தும் இராமலக்குவருக்கு அவ்விரவு எல்லையில்லாது நீண்டதெனவும் கொள்ளலாம். மெய் - தத்துவ ஞானம். நூக்கும் - உந்திச் செலுத்தும். உயிர்ப்பு - பெருமூச்சு. கை அறவு - செயலற்று இருத்தல், கரை - எல்லை. உறு பிறவி - வினைத்தொகை, ஆல், ஏ - அசைகள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Like a false round of births that, through karma, drives on an understanding
  2. that never reaches the truth, the swelling night, so hard to drive away,
  3. went on; their sighs grew and towered like fire fed with ghee, and the long
  4. helplessness they fell into had no shore that could be seen.

What the poem says

The night is compared to the cycle of rebirth. Just as the chain of births cannot be ended by a mind that never reaches true knowledge and is driven on by its deeds, this darkness cannot be pushed away; it keeps on growing.

The brothers' sighs flare up like fire fed with ghee, and their helplessness has no visible end. Poets often picture the cycle of births as darkness; the 'shoreless' quality can also describe the night itself, which seems endless to those in grief.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1mey uṟa uṇarvu cellā aṟiviṉai viṉaiyiṉ nūkkum
poy uṟu piṟavipōlap pōkka arum poṅku kaṅkul,
ney uṟu neruppiṉ vīṅki nimirtara, uyirppu nīḷa
kaiyaṟavu uṟukiṉṟārāl kāṇal ām karaiyiṟṟu aṉṟē.