கம்பராமாயணம் 3631 · ஆரணிய 9.4

Section ஆரணிய காண்டம் / 9. அயோமுகிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

தேமரு தெரியல் வீரன் - தேன் பொருந்திய மலர் மாலையை அணிந்த வீரனாகிய இராமன்; கண் எனத் தெரிந்த - கண் என்று (சிறப்பாகச் சொல்லப்பட்ட; செய்ய தாமரை - சிவந்த தாமரை மலர்கள்; கங்குற் போதும் - இரவுக் காலத்திலும்; குவிந்திலாத் தன்மை - குவிதல் இல்லாதிருந்த தன்மை; இன் நகைச் சனகி என்னும் - இனிய புன்முறுவலை உடைய சானகி என்னும்; காமரு திருவை நீத்தோ - விரும்பத் தகுந்த திருமகளை இழந்ததாலா?; முகமதி காண்கிலாதோ - (அவளது) முகமாகிய சந்திரனைக் காணாததாலா?; என்னோ - என்ன காரணம் என்று; அது யாம் தெரிதல் தேற்றாம் - அதை நம்மால் தெளிவாக அறியக் கூடவில்லை.

சீதையைப் பிரிந்ததனாலும் அவளது முகமதி காணாததாலும் இராமனது செந்தாமரைக் கண்கள் உறங்காதது போல் இரவுக் காலத்தில் கூடத் தாமரை மலர்கள் குவியவில்லை என்றவாறு. செந்தாமரை மலரிலும் இராமபிரானது தாமரைத் திருக்கண்களிலும் உறைந்த பிராட்டியின் பிரிவு அவற்றை உறங்காமலும், குவியாமலும் செய்தன என்க. காமரு - விரும்பத்தக்க, தெரியல் - மாலை, தேற்றாம் - தன்மைப் பன்மை வினைமுற்று. முகமதி - உருவகம், ஓகாரங்கள் ஐயப் பொருள் குறித்து வந்தன. உம்மை - சிறப்புப் பொருளது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. We cannot tell what it was: was it that, parted from Caṉaki of the sweet smile,
  2. that lovely Tiru, or that they could no longer see the moon of her face,
  3. that the red lotuses known as the eyes of the hero with the honey-laden garland
  4. did not close even in the night? Why was it?

What the poem says

A poetic puzzle. Lotuses normally close at night, and Irāmaṉ's eyes are conventionally called lotuses. Tonight his eyes do not close in sleep.

The poet asks why: is it because he has lost Cītai, called Caṉaki as the daughter of Caṉakaṉ, who is Tiru, the goddess Lakṣmī, herself said to dwell in the lotus? Or because the moon of her face is missing, the moon that should make lotuses close? Either way, her absence keeps both flower and eye open.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1yām atu terital tēṟṟām; iṉ nakaic caṉaki eṉṉum
kāmaru tiruvai nīttō? mukamati kāṇkilātō?
tēmmaru teriyal vīraṉ kaṇ eṉat terinta ceyya
tāmarai, kaṅkuṟ pōtum, kuvintilāt taṉmai eṉṉō?