கம்பராமாயணம் 3654 · ஆரணிய 9.27

Section ஆரணிய காண்டம் / 9. அயோமுகிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1நீலமான நிறத்தன் நினைந்தவை
சூலம் ஆகத் தொலைவுறும் எல்லையில் ,
மூலம் ஆம் மலர் முன்னவன் முற்றுறும்
காலம் ஆம் எனக் கங்குல் கழிந்ததே .

பொருள் · Meaning in Tamil

நீலமான நிறத்தன் - நீலமான நிறத்தை உடைய இராமன்; நினைந்தவை - (சீதையைப் பிரிந்த துன்பத்தால் மனத்தில்) நினைந்த எண்ணங்கள்; சூலம் ஆக - சூலம் போல; தொலைவுறும் எல்லையில் - (வருத்த) அழிக்க முயலும் நேரத்தில்; மூல மாமலர் முன்னவன் - (எல்லாப் பொருள்களுக்கும்) மூல காரணமான நாபிக் கமலத்தில் தோன்றிய முதல் கடவுளான பிரமன்; முற்றுறும் - முடிகிற; காலம் ஆம் என - ஊழிக் காலம் (கழிந்தது) ஆம் என்று சொல்லுமாறு; கங்குல் கழிந்ததே - இரவுப் பொழுது நீங்கிற்று.

இராமனுக்கு ஏற்பட்ட பிரிவுத் துயரின் கொடுமையைக் கூறுவதற்காக, இரவு சூலமாகவும், அது கழிதற்கு ஆன கால நீட்சி பிரம கற்பம் போல் மிக நீண்டதாகவும் கூறப்பட்டது. தொலைவுறுதல் - அழிதல், முன்னவன் - பிரமன்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. While the thoughts of him whose colour is blue
  2. pierced him like a trident and wore him away,
  3. the night passed, as though it were the time
  4. when the Elder One born of the great primal flower comes to his end.

What the poem says

At last the night ends. Irāmaṉ's thoughts of Cītai have stabbed him all night like a trident.

To him the night seemed as long as the whole lifetime of Piramaṉ, the creator born from the lotus in Tirumāl's navel; a lifetime of Piramaṉ is the longest span of time in Hindu cosmology. The exaggeration conveys the depth of his suffering.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1nīlamāṉa niṟattaṉ niṉaintavai
cūlam ākat tolaivuṟum ellaiyil,
mūla mā malar muṉṉavaṉ muṟṟuṟum
kālam ām eṉak kaṅkul kaḻintatē.