கம்பராமாயணம் 3655 · ஆரணிய 9.28
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
வெள்ளம் சிலம்பு பாற்கடலின் - வெள்ளம் ஒலிக்கிற திருப்பாற்கடலில்; விரும்பும் துயிலை வெறுத்து - விரும்பி(த் துயிலுகிற) தூக்கத்தை வெறுத்து; அளியும் கள்ளும் சிலம்பும் பூங்கோதை - வண்டுகளும் (அவ்வண்டுகள் வரக் காரணமான தேனும் ஒலிப்பது போல் தோன்றும் மலர்களால் ஆகிய மாலையை அணிந்த கூந்தலை உடைய சீதையினது; கற்பின் கடலில் படிவாற்கு - கற்பாகிய கடல் முழுகியவனாகிய இராமனுக்கு; புள்ளும் சிலம்பும் - (இரங்கிப் பறவைகளும் ஒலிக்கும்; பொழில் சிலம்பும் - சோலைகளும் ஒலிக்கும்; புனலும் சிலம்பும் - தண்ணீரும் (அருவி நீர் ஆற்று நீர் முதலியன ஒலிக்கும், புனை கோலம் உள்ளும் - இராமன் கொண்ட போர்க் கோலத்தின் (போது) (அம்பறாத்தூணியில்) இருந்த; சில் அம்பும் - சில அம்புகள்; சிலம்பாவேல் - (ஒன்றோடு ஒன்றுபட்டு) ஒலிக்காவிட்டால்; உயிர் உண்டாகும் - இராமனின் உயிர் அழியாது நிற்பதற்கு; வகை உண்டோ - வழி உள்ளதோ.
விடியற்காலையில் தோன்றிய ஒலிகள் இராமனின் துயர் கண்டு இரங்கி ஒலித்த ஒலிகள் என்று தற்குறிப்பேற்றமாகக் கூறப்பட்டன. பாற்கடலில் பள்ளி கொண்ட பரமனே சீதையின் கற்புக் கடல் படிவான் என அவதார நிகழ்வு கூறினார். அளி - வண்டு. கள் - தேன். சிலம்புதல் - ஒலித்தல். புனை கோலம் - இராமன் கொண்ட போர்க் கோலம். சில் அம்பு - சில அம்புகள். பூங்கோதை - உவமையாகுபெயர். சொற் பொருள் பின் வரு நிலை அணி காண்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- For him who scorned the sleep he loves on the Milk Ocean where the floods roar,
- and plunged into the ocean of chastity of her whose flower garland hums with bees and honey,
- the birds cried out, the groves cried out, the waters cried out; and had the few arrows
- in the war-dress he wore not rattled too, could his life have held on?
What the poem says
Dawn breaks with sound: birds call, groves rustle, waters splash. The poet imagines all of them crying out in pity for Irāmaṉ, a device of fanciful attribution.
Irāmaṉ is Tirumāl, who left his beloved sleep on the roaring Milk Ocean to be born on earth and plunge instead into the ocean of Cītai's faithful love. The verse plays on the word cilampu, 'to sound', repeated six times; the stirring of his arrows is a sign of the action that keeps him alive.