கம்பராமாயணம் 3656 · ஆரணிய 9.29
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
பெடையும் மயிலும் உடன் திரிய - பெண் மயிலும் ஆண் மயிலும் (ஒன்றாக மகிழ்ச்சியோடு) திரிய; மானும் கலையும் மருவி வர - பெண் மானும் ஆண் மானும் நெருங்கித் திரிய; பயிலும் பிடியும் கடகளிறும் - விளையாடி வருகிற பெண் யானையும் மதம் மிக்க ஆண் யானையும் (ஆகிய இவை), வருவ திரிவ பார்க்கின்றான் - (தன் எதிரே வந்து திரிவதை இராமன் பார்க்கின்றான்; குயிலும் - குயிலின் குரலோசையும், கரும்பும் - கரும்புச் சாற்று இனிமையும்; செழுந்தேனும் - முற்றிய தேனின் சுவையும்; குழலும் - குழலின் இசை இனிமையும்; யாழும் - யாழிசையின் இனிமையும்; கொழும்பாகும் - (முற்றக் காய்ச்சிய) கொழுமையான சர்க்கரைப் பாகின் சுவையும்; அயிலும் அமுதும் - (அனைவரும் விரும்பி) உண்ணும் அமுதத்தின் சுவையும்; சுவை தீர்த்த - (ஆகிய இவற்றின் சுவையையும் இனிமையையும்) தன் குரல் இனிமைக்கு முன் இனிமையே இல்லை என்று தீர்த்த; மொழியைப் பிரிந்தான் - இனிய சொல்லை உடைய சீதையைப் பிரிந்தவனாகிய இராமன்; அழியானோ - வருத்தப்படாமல் இருப்பானோ.
காதல் மடப்பிடியோடு களிறு வருவன கண்டேன் என்பது போல் இணையாக இராமன் முன் திரிந்த மயில், மான், களிறு ஆகியவை அவனது பிரிவுத் துயரத்தை மிகுவித்தன என்றபடி. கலை - ஆண்மான், பிடி - பெண் யானை, கடகளிறு - மதம் மிக்க ஆண் யானை. மொழி - முதலாகு பெயர். சீதையின் பேச்சினிமையைக் கூறும் பகுதியின் சிறப்பை எண்ணுக. குயில், கரும்பு, குழல், யாழ் - இனிமையும் சுவையும் குறித்து வந்தன. பண்பாகு பெயர்கள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Peahen and peacock roaming together, doe and stag drawing close,
- the playful she-elephant and the rutting tusker coming and wandering about: he watches them;
- the cuckoo, the sugarcane, rich honey, the flute, the lute, thick syrup,
- and the nectar one longs to taste, all lost their sweetness to her speech; parted from her, would he not be undone?
What the poem says
Morning shows Irāmaṉ the forest in pairs: peacock and peahen, stag and doe, bull elephant and his mate, all roaming together. In Tamil love poetry, the sight of animals with their mates sharpens the pain of a separated lover.
Cītai's voice was sweeter than everything sweet: the cuckoo's song, sugarcane, honey, flute and lute music, syrup and even the nectar of the gods. Parted from such a woman, how could he not be crushed?