கம்பராமாயணம் 3657 · ஆரணிய 9.30
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
கதிர் வெய்யோன் - கதிர்களை உடைய கதிரவன்; முது கங்குல் விடி நாள் கண்டும் - நீண்டிருந்த இரவு (முடிந்து தோன்றிய) பகல் பொழுதைப் பார்த்தும்; கிளி மிழற்றும் மென் சொல் கேளா - கிளி போல் பேசுகிற (சீதையின் இனிய சொல்லைக் கேட்காத; வீரற்கு - வீரனாகிய இராமனுக்கு; ஆண்டு - அப்பொழுது; யான் அடைத்த கடிநாள் கமலத்து - (யான்) முதல் நாளில் மூடிய மணம் மிக்க தாமரை மலரில்; அடிநாள் செந்தாமரை ஒதுங்கும் அன்னம் - முற்காலத்துத் தாமரை மலரில் தோன்றிய அன்னப் பறவை போன்ற சீதை; இலள் - (இப்போது என்னிடம்) இல்லை; என - என்று; அவிழ்த்துக் காட்டுவான் போல் - விரித்துக் காட்டுபவன் போல்; முடி நாட்டிய கோட்டு உதயத்து - முடி நாட்டியது போல் அமைந்த உச்சியை உடைய உதய கிரியில்; முற்றம் உற்றான் - முழுமையாக விளங்கித் தோன்றினான். ஆல் - ஈற்றசை.
சூரியனைக் கண்டு தாமரை மலர்வதை முன்பு தாமரையில் தோன்றிய திருமகளின் அவதாரமாகிய சீதை இப்பொழுது அம்மலரில் இல்லை என்று இராமனுக்குக் காட்டுவதற்காகக் கதிரவன் அத்தாமரை மலர்களை விரித்துக் காட்ட உதயகிரியில் தோன்றினான் என்றார். தற்குறிப்பேற்ற அணி. முடி - உச்சி. கோடு - மலை. அடி நாள் - முன்னாள். அன்னம் - உவமையாகு பெயர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- He rose full upon the court of the Dawn Mountain, whose peak is set like a crown; after the long old night,
- for the hero who, even seeing day break, could not hear the soft words she prattled like a parrot, there,
- as if to say, 'The swan who of old nestled in the red lotus is not here
- in the fragrant lotus I closed last evening,' and opening them to show him: the sun of burning rays.
What the poem says
The second morning of the canto. The sun rises on the Eastern Mountain, and the lotuses open, as they do at sunrise.
The poet gives a fanciful reason: Cītai is the incarnation of Tiru, the goddess who dwells in the lotus, pictured here as a swan. The sun opens the lotuses he had closed the night before as if to show Irāmaṉ, who still cannot hear her sweet voice, that she is not hiding inside any of them.