கம்பராமாயணம் 3658 · ஆரணிய 9.31

Section ஆரணிய காண்டம் / 9. அயோமுகிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

பொழிலை நோக்கும் - (இராமன் அங்குள்ள) சோலையைப் பார்ப்பான்; பொழில் உறையும் புள்ளை நோக்கும் - அச் சோலைகளில் வாழ்கின்ற சக்கர வாகப் பறவைகளைப் பார்ப்பான்; பூங்கொம்பின் எழிலை நோக்கும் - அங்குள்ள பூங்கொம்புகளின் அழகைப் பார்ப்பான்; இள மயிலின் இயலை நோக்கும் - இள மயிலினது சாயலைப் பார்ப்பான்; இயல்பு ஆனாள் - அவற்றின் இயல்புகள் எல்லாம் தன்னியல்பாக ஆனாளாகிய சீதையினது; குழலை நோக்கி - கருங் கூந்தலை எண்ணியும்; கொங்கை இணைக் குவட்டை நோக்கி - கொங்கைகளாகிய இருமலைகளை எண்ணியும்; அக்குவட்டின் தொழிலை நோக்கி - அக் கொங்கைகளின் மேல் எழுதப்பட்டுள்ள (தொய்யில்) தொழிலைக் கருதிப் பார்த்தும்; தன்னுடைய தோளை நோக்கி - அக் கொங்கைகளில் அணைதல் இல்லாத தன் தோளைப் பார்த்தும்; நாள் கழிப்பான் - நாட்களைக் கழிப்பவன் ஆயினான்.

நோக்கிய காட்சிகளிலெல்லாம் சீதையின் உறுப்புகளையே இராமன் கண்டான் என்றார். சோலை சீதையின் கருங்கூந்தலாகவும், அச்சோலையில் உள்ள சக்கரவாகப் பறவை அவளது இணைக் கொங்கைகளாகவும், பூங்கொம்பின் எழில் கொங்கையில் எழுதப்பட்ட தொய்யிலாகவும், இள மயிலின் இயல் சீதையின் சாயலாகவும் இராமனுக்குக் காட்சியளித்தன என்றார். புள் - பறவை; இங்கே சக்கரவாகப் பறவை. இயல் - சாயல். குவடு - மலை. குவட்டின் தொழில் - தொய்யில் (கலவிக் காலத்தே முலை மேல் எழுதப்படும் சித்திரங்கள்).

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. He looks at the grove; he looks at the birds that live in the grove; he looks at the beauty
  2. of the flowering branch; he looks at the grace of the young peacock; and in her who had become the nature of them all,
  3. he thinks of her hair, of the twin peaks of her breasts, of the designs
  4. painted on those peaks, and then looks at his own shoulders; so he passes the day.

What the poem says

Everything Irāmaṉ sees in the forest turns into a part of Cītai. The dark grove becomes her hair; the paired cakravāka birds, a stock comparison, become her breasts; the flowering branch recalls the decorative designs painted on her breasts in love-making; the young peacock's gait is her grace.

Then he looks at his own shoulders, which no longer embrace her. So the day goes by.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1poḻilai nōkkum; poḻil uṟaiyum puḷḷai nōkkum; pūṅkompiṉ
eḻilai nōkkum; iḷa mayiliṉ iyalai nōkkum; iyalpu āṉāḷ
kuḻalai nōkkik koṅkai iṇaik kuvaṭṭai nōkki, ak kuvaṭṭiṉ
toḻilai nōkkit taṉṉuṭaiya tōḷai nōkki, nāḷ kaḻippāṉ.