கம்பராமாயணம் 366 · பால 7.36

Section பால காண்டம் / 7. தாடகை வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1மற்றவன் விளிந்தமை, மைந்தர் தம்மொடும்
பொன் தொடி கேட்டு, வெம் கனலிற் பொங்குறா,
‘முற்றுற முடிக்குவன் முனியை’ என்று எழா,
நற்றவன் உறைவிடம் அதனை நண்ணினாள்.

பொருள் · Meaning in Tamil

விளிந்தமை - இறந்ததனை; பொற்றொடி - பொன் வளையல் அணிந்த தாடகை; கனல் - தீ; பொங்குறா - பொங்கி, முற்றுற - அடியோடு (முழுதும்); எழா - எழுந்து; நற்றவன் - அகத்தியன்; நண்ணினாள் - அடைந்தாள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. When she of the golden bangles heard, together with her sons,
  2. that he had died, she boiled up like fierce fire,
  3. rose, saying, I will utterly finish this sage,
  4. and came to the dwelling of that good ascetic.

What the poem says

An appendix verse. Hearing of her husband's death, Tāṭakai, still described as a woman with golden bangles, flares up with her two sons. Vowing to destroy Akattiyaṉ completely, she sets off for his hermitage.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1maṟṟavaṉ viḷintamai, maintar tammoṭum
poṟṟoṭi kēṭṭu, veṅ kaṉaliṉ poṅkuṟā,
‘muṟṟuṟa muṭikkuveṉ muṉiyai’ eṉṟu eḻā,
naṟṟavaṉ uṟaiviṭam ataṉai naṇṇiṉāḷ.