கம்பராமாயணம் 3670 · ஆரணிய 9.43

Section ஆரணிய காண்டம் / 9. அயோமுகிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1உயிர்ப்பின் நெருப்பு உமிழ்கின்றனள் ; ஒன்ற
எயிற்றின் மலை குலம் மென்று இனிது உண்ணும்
வயிற்றள் ; வலம் கொடு மாசுணம் வீசு
கயிற்றின் அசைத்த முலை , குழி கண்ணாள் .

பொருள் · Meaning in Tamil

உயிர்ப்பின் நெருப்பு உமிழ்கின்றனள் - (தன்) பெருமூச்சில் நெருப்பை வெளிக் காலுபவளும்; எயிற்றின் - பற்களால்; ஒன்ற - ஒன்றாக; மலைக்குலம் - யானைக் கூட்டங்களை; மென்று இனிது உண்ணும் - கடித்து மென்று இனிமையாக உண்ணுகின்ற; வயிற்றள் - வயிற்றினை உடையவளும்; வயக்கொடு மாசுணம் வீசு கயிற்றின் - வலிமையான கொடிய பாம்புகள் ஆகிய நீண்ட கயிற்றினால்; அசைத்த முலை - சேர்த்துக் கட்டிய முலைகளையும், குழிகண்ணாள் - குழி விழுந்த கண்களையும் உடையவளும்....... (தொடர்ச்சி அடுத்த பாடலில்)

அயோமுகியின் பெருமூச்சு, வயிறு, முலை, கண் ஆகியவை பற்றி இப்பாடலில் கூறப்பட்டன. மலை - யானை. மாசுணம் - பெரும் பாம்பு. மலை - யானைக்கு உவமையாகு பெயர். மலைக்குலம் - இருபெயரொட்டுப் பண்புத் தொகை. வய - வலியென்னும் பொருள் தரும் உரிச் சொல்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. She breathed out fire with her sighs; all at once,
  2. with her teeth, she chewed up herds of mountain-like elephants and ate them with relish,
  3. such was her belly; with ropes made of strong and cruel pythons she had flung round them
  4. her breasts were bound up; her eyes were sunken pits.

What the poem says

This and the next several verses form a single long description of Ayōmuki, one feature at a time.

Here: her breath is fire; her belly can take whole herds of elephants, which she munches happily; her breasts are strapped up with pythons used as ropes; and her eyes are deep-sunk hollows.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1uyirppiṉ neruppu umiḻkiṉṟaṉaḷ; oṉṟa
eyiṟṟiṉ malaik kulam meṉṟu iṉitu uṇṇum
vayiṟṟaḷ; vayak koṭu mācuṇam vīcu
kayiṟṟiṉ acaitta mulai, kuḻi kaṇṇāḷ.