கம்பராமாயணம் 3669 · ஆரணிய 9.42
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
தீயினும் வெய்யாள் - தீயினைக் காட்டிலும் கொடியவள் ஆகிய அயோமுகி, இரந்தனென் எய்திய போது - (நான் இவனை) வேண்டி நெருங்கும் போது; இசையாது நனி கரந்தனனேல் - (என் விருப்பத்துக்கு) இசையாமல் முழுதும் மறுத்து விடுவானாகில்; கொண்டு கடந்து - (அவனை எடுத்துக் கொண்டு கடந்து சென்று; என் முரஞ்சினில் மேவி - எனது குகைக்குக் கொண்டு சென்று; முயங்குவென் என்று - (அவனை வலியத் தழுவுவேன் என்று சொல்லி; எதிர் விரைந்து வந்தனள் - (இலக்குவனுக்கு) எதிராக விரைந்து வந்தாள்.
'என் ஆசைக்கு இணங்கா விட்டால் நான் அவனை வலியத் தூக்கிச் சென்று என் குகையில் வைத்து வலியத் தழுவுவேன்' என்று அயோமுகி எண்ணினாள். முரஞ்சு - பாறை, இங்கு மலை முழைஞ்சாகிய பாறையைச் சுட்டியது. ஆகு பெயர். இரந்தனென் - முற்றெச்சம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'If, when I come to him pleading, he does not agree
- and slips away from me, I will seize him and carry him off,
- and in my rocky cave I will hold him in my arms,'
- she resolved, and came rushing toward him, she who was fiercer than fire.
What the poem says
Ayōmuki makes her plan. She will first ask Ilakkuvaṉ for his love; if he refuses, she will simply carry him off to her mountain cave and embrace him there by force.
With that, she hurries toward him, a creature more terrible than fire. The following verses describe her monstrous appearance.