கம்பராமாயணம் 3668 · ஆரணிய 9.41

Section ஆரணிய காண்டம் / 9. அயோமுகிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
''
''
பாட வேறுபாடு · Project Madurai reads
1அழுந்திய சிந்தை அரக்கி , அலக்கண்
எழுந்து உயர் காதலின் வந்து , எதிர் நின்றாள் ;
'' புழுங்கும் என் நோவொடு புல்லுவென் அன்றி ,
விழுங்கு வெனோ ? '' என விம்மல் உழன்றாள் .

பொருள் · Meaning in Tamil

அழுந்திய சிந்தை அரக்கி - இலக்குவன் மீது (ஆழமாக) அழுந்திய (அன்பு கொண்ட) மனத்தை உடைய அரக்கியாகிய அயோமுகி; அலக்கண் எழுந்து உயர் காதலின் - துன்பம் மிக எழுவதற்குக் காரணமான மிகுதியான ஆசையோடு; எதிர் வந்து நின்றாள் - (இலக்குவனுக்கு) எதிரே வந்து நின்று; 'புழுங்கும் என் நோவொடு புல்லுவென் அன்றி - மனம் (மாறுபட்டு) அழிவதற்குக் காரணமான ஆசையாகிய நோயினால், (அவ்விலக்குவனைத்) தழுவுவேனேயன்றி; விழுங்குவெனோ - (அவனைக்) கொன்று தின்பேனோ (தின்ன மாட்டேன்); என விம்மல் உழந்தாள் - என்று ஏக்கம் (மிகக்) கொண்டு வருந்தினாள்.

இலக்குவன் மீது காதல் கொண்ட அயோமுகி, 'நான் அவனைத் தழுவுவேனேயன்றிக் கொன்று தின்ன மாட்டேன்' என்றாள் என்க. அலக்கண் - துன்பம். புழுங்குதல் - எண்ணி மனம் அழிதல். நின்றாள் - முற்றெச்சம். புல்லுவென் - தன்மை ஒருமை வினைமுற்று. விழுங்குவனோ - ஓகாரம் எதிர்மறை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The demoness, her heart sunk deep in him, driven by a passion that stirred up torment,
  2. came and stood before him;
  3. 'With this burning ache of mine I will embrace him;
  4. would I swallow him?' So she suffered, sighing with longing.

What the poem says

Ayōmuki, now deeply in love, comes and stands in Ilakkuvaṉ's path. Her love is itself a torment that rises within her.

She tells herself that she will not kill and eat him, as a demoness normally would; she only wants to hold him in her arms. The grotesque situation is treated half-comically.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aḻuntiya cintai arakki, alakkaṇ
eḻuntu uyar kātaliṉ vantu, etir niṉṟāḷ;
'' puḻuṅkum eṉ nōvoṭu pulluveṉ aṉṟi,
viḻuṅkuveṉō? '' eṉa vimmal uḻantāḷ.