கம்பராமாயணம் 3672 · ஆரணிய 9.45
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஆழிவறக்க முகக்க அமைந்த - கடலும் வற்றும் படி முகப்பதற்காக அமைக்கப்பட்ட; மூழை எனப் பொலி - அகப்பை என்னும்படி விளங்குகின்ற; மொய் பில வாயாள் - வலிமையான குகை போன்ற வாயை உடையவளும்; கூழை புறத்து விரிந்தது ஓர் கொட்பால் - தலைமயிர் பக்கங்களில் விரிந்து விளங்கும் தன்மையால், ஊழி நெருப்பின் உருத்தனை ஒப்பாள் - உலக ஊழிக் காலத்து நெருப்பின் வடிவம் தனை ஒத்தவளும்...... (தொடர்ச்சி அடுத்த பாடலில்)
அயோமுகியின் பெரிய வாய் கடலை முகந்து வறளச் செய்யும் பெரிய அகப்பை போல் விளங்கியது. அவளது விரிந்த தலைமயிர் ஊழிக் காலத்து நெருப்பை ஒத்து விளங்கியது என்றவாறு. ஆழி - கடல், மூழை - முகக்கும் கருவியாகிய அகப்பை, இதற்கு முகவை எனப் பொருள் கூறி நீர் முகக்கும் கருவியாகிய குடுவை என்பாருமுளர். கூழை - தலைமயிர். கொட்பு - தன்மை. தலைமயிருக்கு ஊழித் தீயை உவமையாகக் கூறியதால் அம்மயிர் சிவந்த நிறமுடையது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- With a vast cavern of a mouth that shone like a ladle
- made to scoop the ocean dry,
- and with her hair flaring out all around her,
- she looked like the very shape of the fire at the end of the age.
What the poem says
Ayōmuki's mouth is a gaping cave, like a giant ladle that could scoop up the whole ocean and leave it dry.
Her hair spreads out wildly around her head; since it is compared to the fire that ends the world, it must be red. She looks like that cosmic fire in bodily form.