கம்பராமாயணம் 3673 · ஆரணிய 9.46
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
தடி தடவ - அளவு கோலால் தடவி அளப்பதற்குரிய; தலை பல தழுவ - (அந்த) இடத்தைப் போன்ற பல இடங்களைத் (தன் ஓரடியில் அளக்கும்படி; தாள் நெடிது அடைய - (தன்) பாதங்கள் நீண்ட தூரம்; அடி தடவ - அடி வைத்துச் செல்ல; குடர் கெழுமு நிணத்தாள் - (அதனால் தான் உண்டு செல்லுகிற) குடலொடு பொருந்திய கொழுப்பு எங்கும் சிதற; பட அரவம் இசைக்கும் - படம் எடுத்த பாம்பின் படத்தை ஒத்த; கடிதடம் உற்றவள் - அல்குல் பொருந்தியவளாகிய (அயோமுகி); உருமு கறிப்பாள் - இடியை ஒத்து பற்களைக் கடிப்பவளாயினாள்.... (தொடர்ச்சி அடுத்த பாடலில்.
நீண்ட அடிவைத்து அயோமுகி வரும் வேகத்தால் அவள் உண்டு வந்த இறைச்சியும் கொழுப்பும் எங்கும் சிதறி விழுந்தன. பாம்பின் படத்தை ஒத்த அல்குலை உடைய அவள் இடிபோல் பற்களைக் கடித்தாள் என்க. தடி - அளவு கோல். இசைக்கும் - ஒக்கும். கடிதடம் - அரையிடம் (அல்லது) அல்குல். உருமு - இடி. கறித்தல் - பற்களைக் கடித்தல். குடர் - கடைப் போலி.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Her feet reaching far, each stride taking in many stretches a measuring rod would gauge,
- with fat and entrails clinging to her and scattering,
- as her steps swept on, with hips like a hooded serpent's spread,
- she came, and she gnashed her teeth like thunder.
What the poem says
Ayōmuki strides toward Ilakkuvaṉ with enormous steps, each covering many measured lengths of ground. As she hurries, scraps of the guts and fat she has been eating fly off her in all directions.
Her hips are broad like a cobra's spread hood, the same image used for Cītai's beauty a few verses earlier, now turned grotesque, and she grinds her teeth with a noise like thunder.