கம்பராமாயணம் 3676 · ஆரணிய 9.49
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
குன்றி நிகர்ப்ப - குன்றி மணியை ஒத்துள்ள; ஆசையின் நீர் கலுழும் கண் - காம நோயால் (சிவந்து நீர் ஒழுகும் கண்களின் மூலம்; குளிர்ப்ப விழிப்பாள் - குளிர்ச்சியாக நோக்குபவள் ஆகிய அயோமுகி, நின்றனள் - நின்றாள்; கன்று இருளில் திரி கோளரி - செறிந்த இருட்டில் திரிகின்ற சிங்கம் போன்ற இலக்குவன்; மின் திரிகின்ற எயிற்றின் விளக்கால் - ஒளி வீசுகின்ற அவள் பற்களின் ஒளியாகிய விளக்கினால், கண்டான் - (அந்த அயோமுகியைக்) கண்டான்.
சிவந்த குன்றி நிகர்க்கும் கண்களால் காதல் கலந்த குளிர் பார்வை பார்த்துக் கொண்டு நின்றாள். இருளில் வலிய சிங்கம் போல் திரிந்த இலக்குவன், அவளது ஒளி வீசுகின்ற பற்களாகிய விளக்கின் ஒளியால் அந்த அயோமுகியைக் கண்டான். முன்பாட்டில் வெப்பக் கனலே உருவான அரக்கியைக் காட்டி, அந்த வெப்பக் கொடுமையே குளிர்வதாக இங்கே காட்டுகிறார். இயல்பான வெம்மை காம வெறியால் குளிர்ப்ப விழிக்கச்செய்துள்ள இரசவாதம் இலக்குவனுக்கு வாய்த்த சோதனை. மின் - ஒளி. கன்று இருள் - செறிந்த இருள். விழிப்பாள் - முற்றெச்சம். எயிற்றின் விளக்கு - உருவகம். கோளரி - உவமை ஆகுபெயர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- She stood there, with eyes that streamed the water of desire,
- red as kuṉṟi seeds, gazing at him with a melting look;
- and by the lamp of her teeth that flashed like lightning,
- the lion roaming in the dense darkness saw her.
What the poem says
Ayōmuki stands before Ilakkuvaṉ, her eyes red as kuṉṟi seeds, the bright red jequirity bean, and wet with longing, trying to look at him tenderly. Her fiery nature has been turned to coolness by desire, an ironic alchemy.
It is pitch dark, but Ilakkuvaṉ, prowling like a lion, sees her by the light of her gleaming teeth, which serve her as a lamp.