கம்பராமாயணம் 3678 · ஆரணிய 9.51
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பண்பு இலர் - நற்பண்புகள் இல்லாதவரும்; பாவியர் ஆம் இவர் - பாவியர்களும் ஆகிய இவர்கள்; நம்பால் - நம்மிடம்; மேவிய காரணம் வேறு இலை - வருவதற்கு உரிய காரணம் வேறு ஒன்றும் இல்லை; என்பான் - என்று நினைத்தவனாகிய (இலக்குவன்; மா இயல் கானின் - விலங்குகள் திரிகின்ற காட்டின்கண்; வயங்கு இருள் வந்தாய் - மிக்க இருளில் வந்தவளாகிய (நீ); யாவள் அடீ - யாரடி; உரை செய் கடிது - விடையை விரைவாகச் சொல், என்றான் - என்று கேட்டான்.
நற்குணமில்லாத கொடியவர்களாகிய அரக்கியர் நம்மிடம் வருவதற்கு வேறு காரணம் இல்லை என்றது பாவம் செய்தலாகிய ஒரு காரணம் உள்ளது எனக் கருதியதாகும். வந்தாய் - முன்னிலை ஒருமை வினையாலணையும் பெயர்; 'வந்தவளே' என விளியாகவும் கொள்ளலாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'These are sinful creatures, without any goodness; they come to us
- for no other reason,' he thought,
- and said, 'You who have come through the thick darkness of this beast-haunted forest,
- who are you, woman? Tell me, and be quick about it.'
What the poem says
Ilakkuvaṉ assumes the worst: demons like her never approach people like them except to do harm.
He challenges her bluntly, using the rough form of address 'aṭī', roughly 'you, woman', and demands that she say at once who she is.