கம்பராமாயணம் 3706 · ஆரணிய 9.79

Section ஆரணிய காண்டம் / 9. அயோமுகிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1''
''

பொருள் · Meaning in Tamil

பரல் தரு கானகத்து - பருக்கைக் கற்கள் நிறைந்த (இந்தக் காட்டில்; பல்கழல் முரற்று அரக்கர் - பல வீரக் கழல்கள் ஒலிக்கின்ற அரக்கர்கள்; அரு வெஞ்சமம் - கொடிய போரை; முயல்கின்றார் - செய்கின்றவர்களாகி, எதிர் உரற்றிய - மாறுபட்டு எதிராக உரக்க ஒலித்த; ஓசை அன்று - பேரொலி அல்ல இது; ஒருத்தி ஊறுபட்டு அரற்றிய குரல் - ஒரு பெண் உடல் குறைபட்டு அரற்றிய குரலாகும் (இது); அவள் அரக்கியாம் எனா - அவள் அரக்கியாகவே இருக்க வேண்டும் என்று (எண்ணி)...

இந்த இரவில் எழுந்த அவலப் பேரொலி அரக்கர்கள் எழுப்பிய போரொலி அன்று, ஒரு பெண் உடல் குறைபட்டு அரற்றிய ஒலியே ஆகும் என்று இராமன் எண்ணினான். இந்த இரவு நேரத்தில் கானகத்திற்கு அரக்கியர் தவிரப் பிறர் வாராராகலின் "அவள் அரக்கியாம்" என இராமன் துணிந்தனன் என்க. முரற்றுதல் - ஒலித்தல். உரற்றுதல் - உரக்க ஒலித்தல். முயல்கின்றார் - முற்றெச்சம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'In this pebble-strewn forest, this is not the roar of demons
  2. with many jangling war-anklets, waging fierce battle
  3. and shouting against a foe; it is the cry of a woman
  4. wounded and wailing; she must be a demoness,' he thought.

What the poem says

Irāmaṉ listens carefully. The noise is not the battle cry of demon warriors with clanking anklets; it is the wail of a woman who has been maimed.

No woman but a demoness would be in this wild forest at night, so he concludes that a demoness has been wounded, and guesses that Ilakkuvaṉ is alive and has dealt with her.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'' paral taru kāṉakattu arakkar, pal kaḻal
muraṟṟu aru veñ camam muyalkiṉṟār, etir
uraṟṟiya ōcai aṉṟu; orutti ūṟupaṭṭu
araṟṟiya kural; avaḷ arakkiyām '' eṉā.