கம்பராமாயணம் 3705 · ஆரணிய 9.78
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
இளையோன் - இளையவனாகிய இலக்குவன்; நெடுமாயையினில் பேர்ந்தான் - (அயோமுகியின்) மிக்க மோகனை என்ற மாயையில் இருந்து நீங்கினான்; பிரியா - அவ்வாறு நீங்கி; அவள் நாசி பிடித்து ஈர்ந்தான் - அவளது மூக்கைப் பிடித்து அறுத்தான்; சோர்ந்தாள் - (அவ்வாறு உறுப்பு அறுப்பு உண்டதனால்) தளர்ந்தவள் ஆகிய (அந்த அரக்கி); இடுபூசல் - எழுப்பிய பேரொலி; செவித் துளையில் சேர்ந்து ஆர்தலுமே - காதுகளில் பட்டு ஒலித்த உடனே; திருமால் தெருளா - இராமன் (கலக்கம் நீங்கி) மனம் தேறி (எண்பதாம் பாடலில் முடியும்).
மோகனை மாயையில் இருந்து நீங்கிய இலக்குவன், அயோமுகியின் மூக்கைப் பிடித்து அறுத்தான். தன் உறுப்பு அறுப்புண்டதனால் தளர்ந்து அவள் எழுப்பிய பேரொலி இராமனின் காதுகளில் பட்டது. பேர்தல் - நீங்குதல். ஈர்தல் - அறுத்தல், சோர்தல் - தளர்தல், தெருளா - இலக்குவன் தன்னைச் சந்தித்துத் துயர் விளைவித்தவரை வென்று விட்டான் என்று தெளிந்தது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The younger one shook off the long enchantment; breaking free,
- he seized her by the nose and cut it off;
- the cry she raised as she reeled
- reached the hollows of his ears and rang there, and Tirumāl came to himself.
What the poem says
Just in time. Far away, Ilakkuvaṉ has come out of Ayōmuki's spell. He grabs her nose and cuts it off, as he did to Cūrppaṇakai.
Her shriek of pain carries through the night and reaches Irāmaṉ, here called Tirumāl, the god he truly is, at the very moment he is about to kill himself. The cry brings him back to his senses.