கம்பராமாயணம் 3704 · ஆரணிய 9.77

Section ஆரணிய காண்டம் / 9. அயோமுகிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1''
''
பாட வேறுபாடு · Project Madurai reads
1'' அறம் பால் உளதேல் , அவன் , முன்னவனாய்ப்
பிறப்பான் உறின் , வந்து பிறக்க '' எனா ,
மறப்பால் வடிவாள் கொடு மன் உயிரைத்
துறப்பான் உறுகின்ற தொடர்ச்சியின் வாய் .

பொருள் · Meaning in Tamil

அறப்பால் உளதேல் - நல்வினைப் பகுதி உண்டானால்; அவன் முன்னவன் ஆய்ப்பிறப்பான் உறில் - (அந்த இலக்குவன் எனக்குத்) தமையன் ஆக வந்து பிறக்கக் கூடுமானால்; வந்து பிறக்க எனா - வந்து பிறக்கட்டும் என்று கூறிக் கொண்டு; மறப்பால் வடிவாள் கொடு - வீரம் பொருந்திய கூர்மையான வாளைக் கொண்டு, மன் உயிரை - தன் நிலை பெற்ற உயிரை; துறப்பான் உறுகின்ற - நீக்க முயல்கின்ற; தொடர்ச்சியின் வாய் - நேரத்தின் கண்ணே... (அடுத்த பாடலில் முடியும்).

நல்லூழ் அமையுமானால் அடுத்த பிறவியில் அவன் எனக்குத் தமையனாகப் பிறக்கிற பேறு வாய்க்கட்டும் என்று சொல்லி, இராமன் வாளால் தன்னுயிரை மாய்த்துக் கொள்ளப் போகும் நிலையினை இப்பாடல் சுட்டிற்று. அறப்பால் - அறத்தின் பயனாகிய நல்லூழ். அவன் எனக்குப் பாகவதனாயிருந்து செய்த கைங்கர்யங்களை நான் அவனுக்குச் செய்ய நல் வினைப் பயனால் அவன் எனக்கு அடுத்த பிறவியில் தமையன் ஆகப் பிறக்கட்டும் என்றவாறு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'If there is any merit stored up for me, and if he can be born
  2. as my elder brother, then let him come and be born so,' he said,
  3. and with his keen sword, made for war,
  4. at the very moment when he was about to cast off his life...

What the poem says

In despair, Irāmaṉ resolves to kill himself. His last wish is that, if he has any merit left, Ilakkuvaṉ should be born as his elder brother in the next life, so that Irāmaṉ can serve him as faithfully as Ilakkuvaṉ has served him.

He draws his sword to end his life. The sentence breaks off here and continues in the next verse.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'' aṟap pāl uḷatēl, avaṉ, muṉṉavaṉ āyp
piṟappāṉ uṟil, vantu piṟakka '' eṉā,
maṟappāl vaṭivāḷ koṭu maṉ uyirait
tuṟappāṉ uṟukiṉṟa toṭarcciyiṉ vāy.