கம்பராமாயணம் 3703 · ஆரணிய 9.76
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
கமையாளொடும் - பொறுமை உடையவளாகிய சீதையுடன்; என் உயிர் - எனது உயிரையும்; காவலில் நின்று - காக்கும் தொழிலில் (ஊன்றி) நின்று; இமையாதவன் - கண்ணிமைக்காமல் இருந்த இலக்குவன்; இத்துணை தாழ்வுறுமோ - (என்னை விட்டுப் பிரிந்து) இத்துணை காலம் தாழ்த்துவானா?; சுமையால் உலகூடு உழல் தொல் வினையேற்கு - சுமையாக உலகத்தில் இருந்து வருந்துகிற பழைய வினையை உடைய எனக்கு; வாழ்வு அமையாது கொல் - (உயிருடன் கூடி வாழும் வாழ்க்கை அமையாது போலும்; அறியேன் எனுமால் - அறியேன் என்று (இராமன் கூறினான்.
'என்னையும் சீதையையும் கண் இமைக்காது காத்த இலக்குவன் இவ்வளவு நேரம் வராமல் இருப்பானா? இருக்க மாட்டான். உலகத்தில் பழியினை நுகர்ந்து வருந்தும் நான் உயிரோடு வாழ முடியாது போலும்' என இராமன் எண்ணினான். கமையாள் - பொறுமை உடையவள்; ஈண்டுச் சீதையைக் குறித்தது. சுந்தர காண்டத்தில் "கமையினாள் திரு முகத்து அயல் கதுப்பு உறக்கவ்வி" (5078) என வருவதைக் காண்க. காவலில் நின்ற இமையாதவன் - இதனைக் கங்கை காண் படலத்தில் குகன் பரதனிடம் கூறிய "அல்லை ஆண்டு அமைந்த மேனி அழகனும் அவளும் துஞ்ச" (2344) என்ற பாடலால் அறிக. இலக்குவனுக்கு 'உறங்கா வில்லி' என்ற பெயர் உண்டு என்பதை நினைவு கொள்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'He who stood on guard over my life and over the patient one,
- never closing his eyes, would he delay so long?
- For me, with my old karma, wandering through the world as a burden,
- perhaps life is simply not to be; I do not know,' he says.
What the poem says
Ilakkuvaṉ is famous as 'the bowman who never sleeps': all through the exile he stood guard over Irāmaṉ and Cītai without closing his eyes, as the boatman Kukaṉ once told Paratan. Such a brother would never be late without reason.
Irāmaṉ concludes that his own ancient karma makes him a burden on the earth, and that perhaps he is not meant to go on living.