கம்பராமாயணம் 3702 · ஆரணிய 9.75
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஆடும் களி மா மத யானை அனான் - பகைவரை அழிக்கும் செருக்குடைய மிக்க மதத்தை உடையதுமாகிய யானையை ஒத்தவனாகிய இராமன்; பல சூழல்கள் தோறும் நடந்து நாடும் - பல இடங்களிலும் சென்று தம்பியைத் தேடுவான்; பெயர் சொல்லி உளைந்து ஓடும் - இலக்குவன் பெயரைச் சொல்லி வருந்தி விரைந்து ஓடுவான்; உயிர்போய் வாடும் வகை சோரும் - உயிர் போய் வாடும் வகையாகத் தளர்வான்; மயங்குறுமால் - மயக்கமடைவான்.
இராமன் தம்பியைத் தேடி அலைந்தமை கூறுகிறார். ஆல் - அசை. ஆடு - அடு என்பது முதல் நிலை நீண்ட தொழிற் பெயர். மாமதம் - உரிச்சொல் தொடர். மத யானை இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை. அனான் - குறிப்பு வினையாலணையும் பெயர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- He searches, walking through one thicket after another;
- he runs, calling out the name in anguish; as though his life had gone,
- he droops and sinks; he falls into a daze,
- he who was like a great rutting elephant, proud and deadly.
What the poem says
Irāmaṉ, mighty as a bull elephant in must, is reduced to stumbling through the dark forest from one thicket to the next, calling Ilakkuvaṉ's name.
He runs, collapses as if lifeless, and loses his senses. The contrast between his strength and his helplessness here is deliberate.