கம்பராமாயணம் 3711 · ஆரணிய 9.84
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
ஊற்று உறு கண்ணின் நீர் ஒழுக நின்றவன் - (இலக்குவனைப் பிரிந்ததால்) ஊற்றுப் போல மிகுதியாக கண்களில் இருந்து கண்ணீர் வெளிப்பட்டு பெருக நின்றவனாகிய இராமன்; ஈற்று இளங் கன்றினைப் பிரிவுற்று - ஈன்ற (தன்) இளமையான கன்றினைப் பிரிந்து; ஏங்கி நின்று - மிக வருந்தி நின்று; ஆற்றலாது அரற்றுவது - (அதை) ஆற்றிக் கொள்ள முடியாது ஒலி செய்யும் (நிலையில்); அரிதின் எய்திட - அந்தக் கன்று தானே வந்து சேர; பால் துறும் பனி முலை - (அக் கன்றைக் கண்ட மகிழ்ச்சியாலும் பாசத்தாலும்) பால் வெளிப்படும் சோர்கின்ற மடியை உடைய; ஆவின் பான்மையான் - பசுவினது தன்மை உடையவன் ஆயினான்.
கண்ணீர் ஊற்றுப் போல் பெருக நின்றவனாகிய இராமன் ஈன்றணிமை பொருந்திய தன் கன்றைக் காணாத புனிற்றா அவலித்து அழுங்கும் போது, கன்று தானே வர அக் கன்றினைக் கண்டு முலை வழியே பால் சோர நிற்கும் பசுப் போன்ற தன்மை உடையவன் ஆயினன் என்க. உலக வழக்கிலும் நூல் வழக்கிலும் கசிவுறும் அன்புக்குக் கன்றுடைய பசுவை உவமை கூறுவது மரபு. துறும் - வெளிப்படும்; பனிமுலை - பால் சோர்ந்தமையால் குளிர்ந்திருக்கும் பால்மடி.
ஆங்கிலம் · English translationAI
Translation
- He who stood with tears pouring from his eyes as from a spring
- was like a cow who, parted from the young calf she had borne, stood lowing in distress,
- unable to bear it, crying out, and when the calf came back, past all hope,
- her cool udder overflowed with milk.
What the poem says
Irāmaṉ, tears streaming like a spring, is compared to a cow that has just calved and lost her young one. She has been lowing in anguish; when the calf comes back at last, her udder starts to flow with milk.
The cow and her calf is the classic Tamil image of tender, overflowing love, and here it is the elder brother who is the mother.