கம்பராமாயணம் 3725 · ஆரணிய 9.98
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
புதுப் புண்டரிக மலரில் - சீதையினது முகம் ஆகிய புதிய தாமரை மலரில்; தேன் பொதி - தேன் நிறைந்த; தொண்டை அம் சேயொளி - கொவ்வைப் பழம் போன்றதும் அழகிய சிவந்த நிறத்தையும் உடைய; துவர்த்த வாய் அமுது உண்டனென் - பவளவாயினது அமுதத்தை உண்டேன்; ஈண்டு - (ஆனால்) இங்கு, அவள் உழையள் இன்றியும் கனவு உண்டாகுமோ - கண்ணுறங்காமல் இருக்கும் போது கூடக் கனவு தோன்றுமா?
சீதையின் தாமரை முகத்தில் உள்ள கொவ்வைச் செவ்வாய் அமுது உண்டது போல் எனக்குத் தோன்றியது. ஆனால் உண்மையில் அவள் என் பக்கத்தில் இல்லை. இது தூக்கமில்லாமல் ஏற்பட்ட கனவு என்று சொல்லத் தக்கதோ? என்று இராமன் வருந்திக் கூறினான். புண்டரிகம் - தாமரை. தொண்டை - கொவ்வைப் பழம். துவர்த்த - பவளத்தின் தன்மை வாய்ந்த; உழை - பக்கம். புண்டரிகப் புதுமலர் - உவமையாகுபெயர். சேயொளி - பண்புத் தொகை. துவர்த்த - பெயரெச்சம். ஆல் - ஈற்றசை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- From a fresh lotus flower brimming with honey,
- from a lovely mouth glowing red like the ivy-gourd fruit, coral-hued, its nectar
- I have drunk; yet she is not here beside me.
- Can a dream come even when the eyes do not sleep?
What the poem says
Irāmaṉ goes on with his night-long lament. The lotus is Cītai's face and the honey is the sweetness of her lips, red as the ivy-gourd fruit and coral. He feels as if he has just kissed her, yet she is not there. Since he has not slept at all, he cannot even call it a dream, and he is left wondering what this vision can be.