கம்பராமாயணம் 3724 · ஆரணிய 9.97

Section ஆரணிய காண்டம் / 9. அயோமுகிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1கரும் குழல் செம் அரி கண்ணி , கற்பினோர்
அரும் கலம் , மருங்கு வந்து இருப்ப , ஆசையால்
ஒருங்கு உறத் தழுவுவென் ; ஊறு காண்கிலேன் ;
மருங்குல்போல் ஆனதோ வடிவும் ? மெல்லவே .

பொருள் · Meaning in Tamil

கருங்குழல் - கருமையான கூந்தலினையும்; சேயரிக் கண்ணி - செவ்வரி படர்ந்த கண்களையும் உடைய; கற்பினோர்க்கு அருங்கலம் - கற்பினை உடைய மகளிருக்கு அருமையான அணிகலன் போன்ற (சீதை); மருங்கு வந்து இருப்ப - (என்) பக்கத்தில் வந்து இருக்க; ஆசையால் ஒருங்குறத் தழுவுவென் - (அவள் மீது கொண்ட) காதலால் உடல் சேரத் தழுவுவேன்; ஒன்றும் காண்கிலேன் - (ஆனால் அவ்வாறு தழுவியும்) ஒன்றையும் காணவில்லை; வடிவும் - அச்சீதை உடைய உருவமும், மருங்குல் போல் மெல்லவே ஆனதோ - (அவளது பொய்யோ எனும்) இடையினைப் போல்; மெதுவாக - இல்லையாய்விட்டதா?

சீதையின் உருவெளித் தோற்றத்தை உண்மையென நம்பித் தழுவிய இராமன், அவளது இடை போல் உருவமும் இல்லாமல் போய் விட்டதோ என்கிறான். குழல் - கூந்தல். அரி - வரி. மருங்கு - பக்கம். மருங்குல் - இடை. மூவழிப் பெருகி மூவழிச் சிறிய உறுப்புகள் கொண்டவள் என்பதைக் கூறியவாறு. கருங்குழல் - பண்புத் தொகை. கற்பினோர் - வினையாலணையும் பெயர். அருங்கலம் - பண்புத் தொகை புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. She of dark tresses and red-streaked eyes, a rare jewel among women of chastity,
  2. comes and sits at my side, and out of longing
  3. I hold her close in a full embrace; I find nothing at all.
  4. Has her whole form too become like her waist, so slight as to vanish?

What the poem says

Irāmaṉ, sleepless in the forest, is still speaking to himself. He imagines Cītai beside him so vividly that he reaches out to embrace her, and his arms close on empty air.

The final line turns on a familiar convention of Tamil love poetry, in which a beautiful woman's waist is so slender that one doubts it exists at all. Irāmaṉ asks whether her whole body has now become as insubstantial as her waist.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1karuṅkuḻal cēyarik kaṇṇi, kaṟpiṉōrkku
aruṅ kalam, maruṅku vantu iruppa, ācaiyāl
oruṅkuṟat taḻuvuveṉ; oṉṟum kāṇkilēṉ;
maruṅkulpōl āṉatō vaṭivum? mellavē.