கம்பராமாயணம் 3729 · ஆரணிய 10.1

Section ஆரணிய காண்டம் / 10. கவந்தன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1 ' '
பாட வேறுபாடு · Project Madurai reads
1நிலம்' பொறை ஈது ! ' என நிமிர்ந்த கற்பினாள் ,
நலம் பொறை கூர்தரு மயிலை நாடிய
அலம்புறு பறவையும் அழுவவாம் எனப்
புலம்புறு விடியலில் கடிது போயினார் .

பொருள் · Meaning in Tamil

நிலம் பொறை இலது என - இந்த நிலவுலகம் பொறுமை உள்ளதன்று என்று கூறும்படி; நிமிர்ந்த கற்பினாள் - உயர்ந்த கற்பினை உடையவளாகிய; பொறை நலம் கூர்தரும் - பொறுமைப்பண்பு மிக்குடைய; மயிலை - மயில் போன்ற சாயலை உடைய சீதையை; நாடிய - தேடி; அலம்புறு பறவையும் - அலைதலைக் கொண்ட பறவைகளும்; அழுவவாம் என - அழுகின்றன என்று கூறும்படியாக; புலம்புறு விடியலில் - (அப்பறவைகள்) ஒலிக்கிற விடியல் காலத்தில்; கடிது போயினார் - விரைவாகச் (சீதையைத்) தேடிப் போனார்கள்.

விடியலில் பறவைகள் ஒலி எழுப்புவது சீதையைத் தேடி அவளைக் காணாமல் அவை அழுவன போன்ற என்றார். தன்மைத் தற்குறிப்பேற்ற அணி. அகழ்வாரைத் தாங்கும் நிலத்தினும் பொறுமை உடையள் அந்நிலத்துத் தோன்றிய சீதை என்றபடி. அலம்புறு பறவை - அலைதலைக் கொண்ட பறவை. மயில் - உவமையாகு பெயர்.

இப்படலத்தில் சீதையைத் தேடல், இலக்குவனைத் தேடல் என்ற இருவகைத் தேடல்களும், சீதையைப் பிரிந்த அவலம், இலக்குவனைப் பிரிந்த அவலம் என்ற இருவகை அவலங்களும் இடம் பெற்றுள்ளன. இந்த இரட்டை நிலையை உணர்ந்து தெளிக.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. So that one would say 'the earth has no patience,' she of lofty chastity,
  2. the peahen rich in the goodness of patience: as if, seeking her,
  3. even the wandering birds were weeping,
  4. in that dawn full of cries they set out swiftly.

What the poem says

At daybreak the brothers resume their search for Cītai. Her patience is said to surpass even that of the earth, which proverbially bears those who dig into it; fittingly, she was born from the earth. The birds calling at dawn seem to the poet to be weeping because they too have searched for her and failed to find her.

This verse opens the canto in which the brothers meet Kavantaṉ.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1nilam ' poṟai ilatu! ' eṉa nimirnta kaṟpiṉāḷ,
nalam poṟai kūrtarum mayilai nāṭiya
alampuṟu paṟavaiyum aḻuvavām eṉap
pulampuṟu viṭiyalil kaṭitu pōyiṉār.