கம்பராமாயணம் 3738 · ஆரணிய 10.10

Section ஆரணிய காண்டம் / 10. கவந்தன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1''
''
பாட வேறுபாடு · Project Madurai reads
1'' தெள்ளிய அமுது எழத் தேவர் வாங்கிய
வெள் எயிற்று அரவம்தான் ? வேறு ஓர் நாகம்தான் ?
தள்ளுரு வாலொடும் தலையினால் வளைத்து
உள் உறக் கவர்வதே ஒக்கும் , ஊழியாய் ! ''

பொருள் · Meaning in Tamil

ஊழியாய்' - எல்லாம் அழிகின்ற ஊழிக்காலத்தும் நிலைத்து நிற்பவனே; தெள்ளிய அமுது எழ - தெளிந்த அமுதம் தோன்றிட; தேவர் வாங்கிய - தேவர்கள் (மந்தர மலையிலே கயிறாகச் சுற்றி) இழுத்த; வெள் எயிற்று அரவம்தான் - வெள்ளைப் பற்கள் கொண்ட வாசுகி நாகமோ; வேறு ஓர் நாகம்தான் - அல்லது வேறு ஒரு பாம்போ; தள்ள அரு வாலொடு தலையினால் வளைத்து - ஒதுக்கித் தள்ளுதற்கு அரிய வாலோடு தலையையும் பிணைத்து வளைத்து; உள் உறக் கவர்வதே ஒக்கும் - (தன் வளைவுக்குள் சிக்கியவற்றையெல்லாம்) தன்னுள்ளே பற்றிக் கொள்வதைப் போல காணப்படுகின்றது' (என்று இலக்குவன் கூறினான்).

கவந்தனின் கரங்கள் வளைவது ஒரு மாபெரும் பாம்பு வாலை தலையொடு பிணைத்திருப்பதுபோல் காணப்படுகின்றது. தலையினும் வால் பகுதி மெலிந்திருப்பது பாம்பின் வடிவம்; எனவே, இங்கு உவமை வடிவத்தைக் குறித்ததன்று; வளைத்தல் தொழிலே இங்கு பொதுத்தன்மை. ஊழி பெயரினும் தான் பெயராதது பரம்பொருள்; இராமன் பரம்பொருளின் அவதாரமாதலின் 'ஊழியாய்' என விளிக்கப் பெற்றான். அரவம்தான், நாகம்தான் என்ற இடங்களில் தேற்றப் பொருள் தரும் 'தான்' ஐய வினாப் பொருளில் வந்தது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "That clear nectar might rise, the gods hauled upon
  2. the white-fanged serpent: is it that? Or is it some other snake?
  3. Bending round with its tail, hard to thrust aside, joined to its head,
  4. it seems to be seizing everything within, O you who outlast the ages!"

What the poem says

Ilakkuvaṉ tries to make sense of the vast ring closing round them. It looks like a gigantic snake with its tail joined to its head, perhaps Vāsuki, the serpent the gods used as a rope when they churned the ocean for the nectar of immortality. The point of the comparison is the encircling grip, not the shape.

He addresses Irāmaṉ as one who remains when the ages pass away, a reminder that Irāmaṉ is the Supreme Being in human form.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'' teḷḷiya amutu eḻat tēvar vāṅkiya
veḷ eyiṟṟu aravamtāṉ? vēṟu ōr nākamtāṉ?
taḷḷa aru vāloṭu talaiyiṉāl vaḷaittu
uḷ uṟak kavarvatē okkum, ūḻiyāy! ''