கம்பராமாயணம் 3739 · ஆரணிய 10.11
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
என்று இவை விளம்பிய - என்று இவற்றைச் சொல்லிய; இளவல் வாசகம் - தம்பி இலக்குவனின் வார்த்தை; நன்று என - பொருத்தமானதே என்று; நடந்த நாயகன் நினைந்தனன் - (உயிர்கள்மேல் கொண்ட இரக்கத்தால் அவதரித்துப் புவி மீது) நடந்த தலைவனாகிய இராமன் எண்ணினான்; ஒன்று இரண்டு யோசனை உள் புக்கு - ஒன்று அல்லது இரண்டு யோசனைத் தொலைவு உள்ளே கடந்து சென்று; ஓங்கல்தான் நின்றென - ஒரு மலையே நின்றது போல; இருந்த அக் கவந்தன் நேர் சென்றார் - அமர்ந்திருந்த அந்தக் கவந்தனுக்கு நேராகச் சென்றடைந்தனர் இருவரும்.
ஒன்று இரண்டு யோசனை' என்பது உலக வழக்கில் பேசுவது போல் அமைந்தது; திட்டவட்டமாக வரையறுத்துக் கூறாதபோது ஒன்று அல்லது இரண்டு' என்ற பொருள்பட 'ஒன்றிரண்டு' எனப் பேசுவது பொது வழக்கு. மலை நின்றால் அமர்ந்திருக்கும் கவந்தன் போலக் காட்சியளிக்குமாம்; நிற்பதற்குக் கால் இல்லாத கவந்தன் இருந்த கோலத்திலேயே நிமிர்ந்து நிற்கும் ஓங்கல் போன்றவன். அவன் தோற்றத்தைச் சொல்லோவியப்படுத்தியது அருமை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The words that his younger brother had spoken
- the lord who walked the earth thought sound;
- going in a league or two, to where, like a mountain
- standing there, Kavantaṉ sat, they went straight up to him.
What the poem says
Irāmaṉ accepts his brother's reading of the situation, and the two press on into the circle until they come face to face with Kavantaṉ himself. Having no legs, the monster can only sit, yet even seated he looms like a mountain standing upright.
"Walked the earth" recalls that God took human form and came down to walk among his creatures. This verse begins a long description of Kavantaṉ's appearance.