கம்பராமாயணம் 374 · பால 7.44
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
இலங்கை அரசன் பணி அமைந்து - இலங்கை வேந்தனான இராவணனுடைய கட்டளையை மேற்கொண்டு; விலங்கல் வலிகொண்டு - மிருக பலம் கொண்டவளாய் (எனக்கு); ஓர் இடையூறாய் - ஒரே இடையூறாக இருந்து கொண்டு; எனது வேள்வி நலிகின்றாள் - (அரக்கர்கள்) எனது வேள்வியை (நிறைவேறவிடாமல்) துன்புறுத்துகின்றாள்; அலங்கல் முகிலே - மாலையணிந்த மேகம் போன்றவனே!; அவள் இவ்வங்க நிலம் எங்கும் - அவ்வரக்கி, இந்த அங்க நாட்டில் வாழ்பவர்களை எல்லாம்; குலங்களொடு அடங்க - அவர்களது குலத்தோடு முழுதும்; நனிகொன்று திரிகின்றாள் - மிகவும் அழித்துக் கொன்று திரிந்து கொண்டிருக்கிறாள்; பணி - கட்டளை (வேலையுமாம்.
பணி: கட்டளை (வேலையுமாம். வலி: மிருகபலம் (மூர்க்கத்தனமான வலிமை). நலிதல்: வருத்துதல் அலங்கல்: மாலை. முகில்: மேகம். இந்தப் பகுதியெல்லாம்: அங்கநாடு. இங்கு வாழ்பவர்களை எல்லாம் இந்த அரக்கி குலத்தோடு கொன்று தின்று திரிகிறாள். இராவணனது கட்டளைப்படி அரக்கர்கள் எனது வேள்விக்கு இடையூறு செய்து துன்புறுத்துகின்றனர் என்றான் முனிவன் என்பது கருத்து.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Carrying out the command of the king of Ilaṅkai, she is a hindrance to me,
- and with the brute strength of a beast she torments my sacrifice;
- O you who are like a garlanded cloud, all over this land of Aṅgam
- she roams, killing its people outright, clan and all.
What the poem says
The sage tells Irāmaṉ that Tāṭakai acts under orders from Irāvaṇaṉ, king of Ilaṅkai. With her savage strength she harasses Vicuvāmittiraṉ's sacrifice, and she has wiped out whole families of the Aṅga country around them.
He addresses Irāmaṉ as a dark rain-cloud wearing a garland, a common image for the hero's dark complexion. This is the first mention in the story of Irāvaṇaṉ's hand behind the demons' raids.