கம்பராமாயணம் 3742 · ஆரணிய 10.14

Section ஆரணிய காண்டம் / 10. கவந்தன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

கருமகன் - கருமானின்; தொகைக் கனல் துருத்தித் தூம்பு என - தொகுப்பாய் உள்ள நெருப்பில் அமைந்த ஊதுலையின் துளை போல; புகைக் கொடி கனலொடும் பொடிக்கும் மூக்கினான் - புகையை நெருப்போடு வெளிப்படுத்துகின்ற மூக்கினை உடையவன்; பகைத் தகை - பகைமைப் பண்பு கொண்ட; நெடுங்கடல் - பெரிய கடலினது நீரை; பருகும் பாவகன் - குடித்துவிடுகின்ற அக்கினிதேவனின்; சிகைக் கொழுந்து இது என - சுவாலையின் கொழுந்துதான் இது என்னும்படி; திருகு நாவினன் - வளைந்து சுழல்கின்ற நாக்கினை உடையவன்.

கவந்தனின் மூக்கும் நாக்கும் இங்கே உவமைகளால் விளக்கப்பட்டன. கொல்லனின் உலைக்களத்துத் துருத்தியின் வாயிலாகப் புகையும் நெருப்பும் உமிழப்படும். அந்தக் காட்சி கனல் உமிழ்கின்ற கவந்தனின் மூக்குக்கு உவமையாயிற்று. நீர் நெருப்புக்குப் பகையாதலால் நீர் நிறைந்த கடலினைப் பகைத்தகை நெடுங்கடல்' என்றார். பாவகன் நெருப்பிறைவனாகிய அக்கினி தேவன். இடைவிடாது ஆறுகள் கடலில் கலப்பதால் நீர் வரைகடந்து பெருகிவிடுமோ என்ற எண்ணத்தால் கடல் நீரை வடவைமுகத் தீ பருகி விடுவதாகவும், பெண் குதிரையின் முக வடிவில் இந்த நெருப்பு கடலின் நடுவே இருப்பதாகவும் புராண நூல்கள் பேசுகின்றன. கரித்துண்டுகள் பலவற்றிலிருந்து நெருப்பு எழுவதால் கொல்லனின் ஊதுலைக் களத்து நெருப்பைத் தொகைக் கனல் என்றார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Like the pipe of a smith's bellows over heaped-up coals,
  2. his nose spat out plumes of smoke together with fire;
  3. as if it were the flaming crest of the Fire
  4. that drinks the great, hostile ocean, his tongue twisted.

What the poem says

Two more of Kavantaṉ's features are drawn through comparisons. His nose pours out smoke and fire like the nozzle of a blacksmith's bellows. His writhing tongue is like the flame of the submarine fire which, according to the Purāṇas, sits in the middle of the ocean in the shape of a mare's head and drinks its water so that the sea, constantly fed by rivers, does not overflow. Water and fire are natural enemies, hence the "hostile ocean".

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tokaik kaṉal karumakaṉ turuttit tūmpu eṉa
pukaik koṭi kaṉaloṭum poṭikkum mūkkiṉāṉ
pakait takai neṭuṅkaṭal parukum pāvakaṉ
cikaik koḻuntu itu eṉat tiruku nāviṉaṉ.