கம்பராமாயணம் 3746 · ஆரணிய 10.18
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
முற்றிய உயிர் எலாம் - முற்றுகையிடப்பட்ட உயிர்கள் யாவும்; முருங்க வாரி - அழியும்படியாக வாரியெடுத்து; தான் பற்றிய கரத்தினன் - தான் பற்றிக் கொண்ட கைகளை உடையவனாய்; பணைத்த பண்ணையில் - (கூட்டமாகப்) பெருகிய தொகுதியாக; துற்றிய - திணிக்கப்படும் உயிரினங்கள்; புகுதரும் தோற்றத்தால் - (கவந்தன் வயிற்றில் அமைந்த வாய்க்குள்ளே) புகுகின்ற காட்சியால்; நமன் - கூற்றுவனுடைய; கொற்ற வாய்தல் செயல் - வெற்றி கொண்ட வாசலில் உயிர்கள் நுழைகின்றதை, குறித்த வாயினான் - (உவமையாகக்) குறிக்கத் தக்க வாயினை உடையவன்.
கானகத்தின் பல பக்கங்களிலும் திரிகின்ற உயிரினங்கள் மிகப் பெரிய கவந்தனின் கரங்களுக்கிடையே அகப்பட்டுக் கொள்கின்றன; அப்போது அவை முற்றுகைக்குள் சிக்கியவை ஆகின்றன. முருங்குதல்; அழிதல். பண்ணை; கூட்டம். கூற்றுவன் உயிர்களைப் பற்றுதலில் வெற்றியையன்றித் தோல்வி அறியாதவன்; ஆகையால், அவன் வாசல் கொற்ற வாயில் எனப்பட்டது. வாய்தல்; வாசல். கூற்றுவனது நகர் வாசல் கவந்தன் வாய்க்கு உவமை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- With arms that sweep up every creature hemmed in, crushing them, and hold them fast,
- as in swollen crowds they are crammed in
- and pass inside, by that sight his mouth was one that calls to mind
- the victorious gateway of Namaṉ, lord of death.
What the poem says
Kavantaṉ's arms scoop up the animals trapped inside their circle and push them in crowds into the mouth in his belly. Watching them disappear, the poet thinks of the gate of the city of Death, through which every living being must pass. That gate is called victorious because Death never fails to take a life.