கம்பராமாயணம் 3747 · ஆரணிய 10.19

Section ஆரணிய காண்டம் / 10. கவந்தன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஓலம் ஆர் கடல் என முழங்கும் ஓதையான் ,
ஆலமே என இருண்டு அழன்ற ஆக்கையான் ,
நீலமால் , நேமியின் தலையை நீக்கிய
கால நேமியைப் பொரும் கவந்தக் காட்சியான் .

பொருள் · Meaning in Tamil

ஓலம் ஆர் கடல் என - ஆரவாரம் பொருந்திய கடல் போல; முழங்கும் ஓதையான் - முழக்கம் செய்யும் ஓசை எழுப்புவோனாய், ஆலமே என - ஆலகால நஞ்சு எனும்படியான; இருண்டு அழன்ற ஆக்கையான் - கறுத்து எரிகின்ற உடம்பினை உடையவன் அக்கவந்தன்; நீல மால் - நீல நிறத்தவனாகிய திருமால்; நேமியான் - தன் சக்கரப் படையால், தலையை நீக்கிய - தலை அரியப்பெற்ற; கால நேமியைப் பொரும் - காலநேமி என்ற அரக்கனைப் போல்; கவந்தக் காட்சியான் - தலையற்ற உடல் தோற்றம் கொண்டவன், அக் கவந்தன்.

ஆலகாலம் நிறத்திற்கும் உயிர் வாங்கும் கொடுமைக்கும் உவமை; உருவம் பண்பு இரண்டாலும் பொதுத்தன்மை கொண்டது. காலநேமி என்பான் இரணியனின் ஒரு மகன்; நூறுதலைகளும் நூறுகரங்களும் கொண்டவன். திருமால் தன் சக்கராயுதத்தால் அவன் நூறுதலைகளையும் அரிந்தான் என்பதொரு கதை. தலைகளை இழந்த பின்னும் கால நேமியின் உடல் போர்த்திறம் இழவாமல் பொருதது என்பது புராணச் செய்தி. அதுபோலவே, தலை எனத் தனி ஓர் உறுப்பு இலாதவனாகிய கவந்தனும் எதிர்த்துப் பொருகின்ற திறமுடையான் என்பது உவமையின் நுட்பம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. With a roar that thundered like the clamorous sea,
  2. with a body dark as the deadly poison, and burning,
  3. he looked like Kālanēmi, whose head the dark-blue Māl
  4. struck off with his discus: a headless trunk in form.

What the poem says

More of Kavantaṉ's appearance: his voice roars like the ocean, and his body is black and burning like the poison that arose at the churning of the ocean, deadly as well as dark. Without a head, he resembles the demon Kālanēmi, whose hundred heads Viṣṇu cut off with his discus. According to the Purāṇas, Kālanēmi's body went on fighting even without its heads, and the comparison hints that headless Kavantaṉ is just as dangerous.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ōlam ār kaṭal eṉa muḻaṅkum ōtaiyāṉ,
ālamē eṉa iruṇṭu aḻaṉṟa ākkaiyāṉ,
nīla māl, nēmiyāṉ talaiyai nīkkiya
kālanēmiyaip porum kavantak kāṭciyāṉ.