கம்பராமாயணம் 3750 · ஆரணிய 10.22

Section ஆரணிய காண்டம் / 10. கவந்தன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
''
''

பொருள் · Meaning in Tamil

அவ்வழி - அப்போது அவ்விடத்திலே; இளையவன் - இளையவனாகிய இலக்குவன்; அமர்ந்து நோக்கியே - ஆற அமர (நிதானமாக)ப் பார்த்து; வில்வலாய்! - வில் வித்தை வல்லவனே (என இராமனை விளித்து); வெவ்வியது ஒரு பெரும் பூதம் - இது கொடுமையான ஒரு பூதம்; வவ்விய - பிடித்துப் பற்றிக் கொண்ட உயிர்களை; தன் கையின் வளைத்து - தன் கையினால் வளைத்துப் பிடித்து; வாய்ப் பெயும் - தன்வாய்க்குள்ளே இட்டுக் கொள்ளுவது (இப் பூதத்தின் செயல்); இவண் செய்வது என் - இவ்விடத்தில் நாம் என்ன செய்யலாம்; என - என்று வினவ; செம்மல் சொல்லுவான் - இராமபிரான் பின்வருமாறு விடை சொன்னான்.

அரக்கர்தம் மதில் வாயிலோ என்று ஐயுற்ற நேரத்தில், இலக்குவன் நிதானமாகக் கவனித்தான்; கரங்களால் உயிரினங்களைக் கவர்ந்து விழுங்கும் வாயே தாம் கண்ட பிளவு எனத் தெளிந்து கூறினான். கவந்தன் கைகளால் வளைக்கப்பட்ட உயிர்களுள் இவ் இருவரும் அடங்குவர். "பூதத்தின் வாயில் திணிக்கப்படும் நிலையில் சிக்கிக் கொண்டோமே, செய்யத்தக்கது இதுவெனத் தெரியவில்லையே" என்பது இலக்குவன் வினா.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Then the younger brother looked steadily and with care:
  2. "It is a cruel thing, a great monster, O master of the bow!
  3. What it seizes it bends in with its arms and drops into its mouth.
  4. What shall we do here?" At this the noble one spoke.

What the poem says

Once more Ilakkuvaṉ looks calmly and sees the truth: what they took for a city gate is the mouth of a monstrous being that gathers creatures in with its arms and swallows them. He tells Irāmaṉ that they themselves are caught inside the ring and asks what they should do. The next verse gives Irāmaṉ's reply.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1avvaḻi iḷaiyavaṉ amarntu nōkkiyē
'' vevviyatu, oru perum pūtam, vil valāy!
vavviya taṉ kaiyiṉ vaḷaittu vāyp peyum;
ceyvatu eṉ ivaṇ? '' eṉac cemmal colluvāṉ.